உலகம்

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடிப்பு: 6 விமான நிலையங்கள் மூடல்

300+ விமான சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்​துச் சிதறியதையடுத்து 6 விமான நிலை​யங்​கள் மூடப்பட்டுள்​ளதுடன் 300-க்​கும் மேற்​பட்ட விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

அந்​நாட்​டின் தலைநகர் ஜகார்த்தா உள்​ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்​பாடு​கள் நேற்று தற்​காலிக​மாக நிறுத்தப்பட்​டன. எரிமலை​யி​லிருந்து வெளி​யேறிய சாம்​பல் வான் பரப்​பில் பரவியதை அடுத்​து, ஜகார்த்​தா​வின் சுகர்​னோ-ஹட்டா சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளூர் நேரப்​படி காலை 5:30 மணி முதல் தனது சேவை​களைத் தற்​காலிக​மாக நிறுத்​தி​யது. இதனால் ஒரே நாளில் சுமார் 22,800 பயணி​கள் பாதிக்​கப்​பட்​டனர்.

சிங்​கப்​பூர், ஹாங்​காங், சிட்​னி, ஆம்​ஸ்​டர்​டாம், சியோல், தோகா, கோலாலம்​பூர் போன்ற சர்​வ​தேச நகரங்​களுக்​கான சேவை​களும், பாலி, சுரா​பாயா உள்​ளிட்ட உள்​நாட்டு நகரங்​களுக்​கான சேவைகளும் ரத்து செய்​யப்​பட்​டன. சில விமானங்​கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்​பட்​டன. பயணி​கள் விமான நிலையங்களில் தங்​களின் பணத்​தைத் திரும்​பப் பெற​வும், உடைமை​களை மீட்​க​வும் நீண்ட வரிசை​யில் காத்​திருந்​தனர்.

எரிமலை வெடிப்​பைத் தொடர்ந்து செயற்​கைக்​கோள் படங்​களின் மூலம் இரு பெரிய சாம்​பல் மேகங்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இதில் ஒரு சாம்​பல் மேகம் சுமார் 20,000 அடி (6,100 மீட்​டர்) உயரத்துக்கு எழும்பி ஜகார்த்தா, அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களைப் பாதித்​துள்​ளது.மற்​றொரு பெரிய சாம்​பல் மேகம் சுமார் 50,000 அடி (15,200 மீட்​டர்) உயரத்​துக்கு மேல் எழும்​பி, சுண்டா ஜலசந்தி, இந்​தி​யப்​ பெருங்​கடல்​ பகு​தி​களுக்​கு மேல்​ பரவி வருகிறது.

SCROLL FOR NEXT