உலகம்

தொடரும் வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் இந்திய விசா மையம் மூடல்

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேசத்​தின் சிட்​ட​காங் நகரில் உள்ள இந்​திய விசா விண்​ணப்ப மையத்தை மத்​திய அரசு மூடி​யுள்​ளது.

வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு மாணவர்​கள் நடத்​திய பேராட்​டத்தை தொடர்ந்​து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன்​ பிறகு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்கால அரசு அமைக்​கப்​பட்​டது. மாணவர் போராட்​டத்​துக்கு தலை​மையேற்று நடத்​திய ஷெரீப் உஸ்​மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்​கா​வில் சுடப்​பட்டு உயி​ரிழந்தார்.

இதையடுத்து, டாக்​கா​வில் நேற்​று ​முன்​தினம் ஹாடி​யின் உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது. இதற்​கிடை​யில், வங்​கதேசத்​தின் பல பகு​தி​களில் வன்​முறை ஏற்​பட்​டது. இந்து இளைஞர் ஒரு​வரை கொடூர​மாக தாக்​கி, மரத்​தில் கட்டி வைத்து எரித்​தனர். இதனால் தொடர்ந்து பதற்​றம் நில​வு​கிறது.

மேலும், இந்​திய துணைத் தூதர் இல்​லம், அலு​வல​கத்​தின் மீது கற்​கள் வீசி தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதையடுத்து டாக்​கா​வில் உள்ள இந்​திய விசா விண்​ணப்ப மையம் மூடப்​பட்​டது. தற்​போது வங்​கதேசத்​தின் 2-வது பெரிய நகர​மான சிட்​ட​காங்​கிலும், இந்​திய விசா விண்​ணப்ப மையம் நேற்று மூடப்​பட்​டது.

வங்​கதேசத்​தில் உள்​ளவர்​கள் இந்​தி​யா​வுக்கு வர இந்​திய விசா பெற வேண்​டும். அதற்​கென அமைக்​கப்​பட்​டுள்ள இந்​திய மையங்​களில் விசா விண்​ணப்​பங்​கள் அளிக்க வேண்​டும். அதைப் பரிசீலித்து இந்​திய தூதரகத்​துக்கு அனுப்பி வைக்​கப்​படும். அதன்​பிறகு தகுதி உள்​ளவர்​களுக்கு குறிப்​பிட்ட காலத்​துக்கு இந்​திய விசா வழங்​கப்​படும்.

பெரும்​பாலும் மருத்​துவ சிகிச்​சை, வர்த்​தகம் போன்ற வற்றுக்​காக வங்​கதேசத்​தினர் இந்​தியா வரு​கின்​றனர். இந்​திய விசா மையங்கள் மூடப்​பட்​டுள்​ள​தால், அவர்​களுக்கு விசா கிடைப்​பது சிக்​கலாகி உள்​ளது. அடுத்த உத்​தரவு வரும் வரை​யில் சிட்​ட​காங் இந்​திய விசா விண்​ணப்ப மையம் மூடப்​பட்​டிருக்கும் என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

பொய் செய்திக்கு கண்டனம்: இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வங்கதேச இடைக்கால அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாஸ் கொலையை கண்டித்து இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் 25 இளைஞர்கள் கோஷமிட்டனர்.

ஆனால், வங்கதேச தூதரகத்துக்கு, உள்ளே நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்றதாக வங்கதேச பத்திரிகைகள் தவறாக செய்திகள் வெளியிட்டன. அதுபோல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அங்கிருந்த இளைஞர்களை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் பொதுவெளியில் உள்ளன. அவற்றைப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT