உலகம்

ட்ரம்பின் வரி விதிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற இந்திய வழக்கறிஞர்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்​ரலில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு புதிய வரி விகிதங்கள அறி​வித்​தார். இதை எதிர்த்து அமெரிக்க குறு, சிறு நிறு​வனங்​கள் மற்​றும் 12 மாகாண அரசுகள் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தன. இரு கீழமை நீதி​மன்​றங்​களில் அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விகிதங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

இதை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இந்த வழக்​கில் கடந்த ஆண்டு நவம்​பர் முதல் விசா​ரணை நடை​பெற்று வந்​தது. பல்​வேறு சட்ட நிறு​வனங்​கள் அதிபர் ட்ரம்​பின் வரி விதிப்​புக்கு எதி​ராக வழக்​கு​களை தொடர்ந்​திருந்​தன. குறிப்​பாக குரோவெல் அண்ட் மோரிங் சட்ட நிறு​வனம் சார்​பில் 150 வழக்​கு​கள், சிட்லி ஆஸ்​டின் சட்ட நிறு​வனம் சார்​பில் 150 வழக்​கு​கள், கிரன்​பிளட் சட்ட நிறு​வனம் சார்​பில் 300 வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

          

இந்த வழக்கு விசா​ரணை​யில் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த முன்​னாள் செயல் சொலிசிட்​டர் ஜெனரல் நீல் கத்​யால் முதன்மை வழக்​கறிஞ​ராக ஆஜரா​னார். பெரும்​பாலான விசா​ரணை​களில் அவரே, அதிபர் ட்ரம்​பின் வரி விகிதங்​களை எதிர்த்து வாதாடி​னார். அவரது வாதத் திறமை​யால் அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விகிதங்​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன.

இந்​தி​யா​வின் ஹரி​யானா மாநிலத்தை பூர்​வீக​மாகக் கொண்ட நீல் கத்​யாலின் தந்தை சுரேந்​தர் இன்​ஜினீயர் ஆவார். தாய் பிரதீபா மகப்​பேறு மருத்​து​வர் ஆவார். கடந்த 1970-ம் ஆண்டு சிகாகோ​வில் பிறந்த நீல், டார்ட்​மவுத் கல்​லூரி, யேல் சட்​டப் பள்​ளி​யில் படித்​தார். முன்​னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்​சிக் காலத்​தில் கடந்த 2010 மே மாதம் முதல் 2011 ஜூன் வரை செயல் சொலிசிட்​டர் ஜெனரலாக பணி​யாற்​றி​னார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் வரி விதிப்​புக்கு எதி​ரான வழக்​கில் சிறப்​பாக வாதாடி வெற்றி பெற்​றதன் மூலம் ஒட்​டுமொத்த உலகத்​தின் கவனத்​தை​யும் நீல் கத்​யால் ஈர்த்​துள்​ளார். வழக்கு குறித்து அவர் கூறும்​போது, “அமெரிக்​கா​வின் சிறு நிறு​வனங்​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் ஆஜராகி வாதாடினேன்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு அதிக அதி​காரங்​கள் இருக்​கலாம். ஆனால், அவரை விட அரசி​யலமைப்​புச் சட்​டம் பெரி​தானது. அந்​தச் சட்​டத்தை அவரால் உடைக்க முடி​யாது. இதை அமெரிக்​க உச்​ச நீதி​மன்​றம்​ உறு​தி செய்​திருக்​கிறது” என்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT