உலகம்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் முக்கிய பதவிகளுக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்​தலில், முக்​கியப் பதவிகளுக்​குப் போட்​டி​யிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்​பாளர்​களின் வெற்​றியும் தோல்​வியும் கவனம் பெற்​றுள்​ளது.

அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் பிரதி​நி​தி​கள் சபையில் உள்ள 435 இடங்​களுக்​கும், 100 உறுப்​பினர்​களைக் கொண்ட செனட் சபையில் 35 இடங்​களுக்​கும் இடைக்​கால தேர்​தல் நடை​பெற்​றது. மேலும், 36 மாகாணங்​களில் ஆளுநர் பத​விக்​கான தேர்​தலும் நடை​பெற்​றது. இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் சிலர் வெற்​றியும், சிலர் தோல்​வியும் கண்டு கவனம் பெற்​றுள்​னர். அவர்​களின் தேர்​தல் முடிவு​கள் விவரம்:

விவேக் ராமசாமி

இந்​தி​யாவின் கேரள மாநிலத்​தைப் பூர்​வீக​மாகக் கொண்ட பெற்​றோருக்​குப் பிறந்த குடியரசுக் கட்சி வேட்​பாளர் விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்​தலில் தோல்​வியடைந்​தார். ட்​ரம்​பின் ஆதரவைப் பெற்ற அவர், கடந்த மே மாதம் நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் வேட்​பாளர் தேர்​வில் வெற்றி பெற்​றிருந்​தார்.

சுஹாஸ் சுப்​பிரமணி​யம்

அமெரிக்க முன்​னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆலோ​சக​ராகப் பணி​யாற்​றிய சுஹாஸ் சுப்​பிரமணி​யம் (40), அமெரிக்க பிரதி​நி​தி​கள் சபைக்கு மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். வர்​ஜீனியா மாகாணத்​தின் 10-வது நாடாளு​மன்​றத் தொகுதி​யில் போட்​டி​யிட்டு 61 சதவீதத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​களைப் பெற்​றார். இந்​தி​யப் பெற்​றோருக்கு ஹூஸ்​டன் நகரில் பிறந்த சுஹாஸ், ஒபாமா அதிபராக இருந்​த​போது வெள்ளை மாளி​கை​யில் தொழில்​நுட்​பக் கொள்கை ஆலோ​சக​ராகப் பணி​யாற்​றினார்.

பியா தண்​டியா

முன்​னாள் பள்​ளித் தலைமை ஆசி​ரியையான பியா தண்​டியா (39), புளோரிடா மாகாணத்​தின் 22-வது நாடாளு​மன்​றத் தொகுதி​யில் ஜனநாயகக் கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு 51.9 சதவீத வாக்​கு​களைப் பெற்று வெற்றி பெற்​றார். இவர் புளோரிடாவின் பாம் பீச் கவுன்டி பகுதி​யில் பிறந்து வளர்ந்​தவர்.

ரோ கண்ணா - ரிதேஷ் டாண்​டன்

கலிபோர்​னியா மாகாணத்​தின் 17-வது நாடாளு​மன்​றத் தொகுதி​யில் ஜனநாயகக் கட்சி உறுப்​பினர் ரோ கண்ணா மீண்​டும் வெற்றி பெற்​றார். சிலிக்​கான் வேலி பகுதி​களை உள்​ளடக்​கிய இந்​தத் தொகுதி​யில், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிதேஷ் டாண்​டன் அவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்​டார்.

பிரமிளா ஜெயபால்-நிரவ் ஷேத்

வாஷிங்​டன் மாகாணத்​தின் 7-வது நாடாளு​மன்​றத் தொகுதி​யில் போட்​டி​யிட்ட பிரமிளா ஜெயபால் வெற்றி பெற்​றார். அவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்​ட​வர் குஜராத்​தில் பிறந்த முன்​னாள் அமெரிக்க கடற்​படை வீரரான குடியரசுக் கட்சி வேட்​பாளர் நிரவ் ஷேத். கேரளாவைப் பூர்​வீக​மாகக் கொண்ட குடும்​பத்​தில் பிறந்த பிரமிளா ஜெயபால், 2017-ம் ஆண்டு முதல் இந்​தத் தொகுதி​யின் நாடாளு​மன்ற உறுப்​பின​ராகப் பதவி வகித்து வரு​கிறார். அமெரிக்க பிரதி​நி​தி​கள் சபைக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முதல் இந்​திய வம்​சாவளிப் பெண் என்ற பெரு​மையும் இவருக்கு உண்டு.

அமி பெரா

இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளு​மன்ற உறுப்​பினர் அமி பெரா (61), கலிபோர்​னியாவின் 3-வது நாடாளு​மன்​றத் தொகுதி​யில் மீண்​டும் வெற்றி பெற்​றார். குடியரசுக் கட்சி வேட்​பாளர் ராப் டக்​கரைத் தோற்​கடித்த அவர், 8-வது முறை​யாக அமெரிக்க பிரதி​நி​தி​கள் சபைக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

மருத்​து​வ​ராக இருந்து அரசி​யலுக்கு வந்த இவர், அமெரிக்க நாடாளு​மன்​றத்​தில் நீண்​டகாலமாகப் பணி​யாற்றி வரும் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவர் ஆவார். 1965-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்​ஸில் குஜராத்​தைச் சேர்ந்த பெற்​றோருக்​குப் பிறந்​தார். அமெரிக்க நாடாளு​மன்​றத்​துக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 3-வது இந்​திய வம்​சாவளி உறுப்​பினர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

பூஜா சேத்தி

ஜனநாயகக் கட்சி வேட்​பாளரான பூஜா சேத்தி, டெக்​சாஸ் மாகாண சட்​டப்​பேரவை​யின் 47-வது தொகுதி​யில் வெற்றி பெற்றார். வழக்​கறிஞரான இவர், இதற்கு முன்பு டெக்​சாஸ் சட்​டப்​பேரவை​யில் தலைமை அதி​காரியாகப் பணி​யாற்​றியுள்​ளார்.

சந்​தீப் ஸ்ரீவஸ்தவா

ஜனநாயகக் கட்சி வேட்​பாளரான சந்​தீப் வஸ்தவா, டெக்​சாஸ் மாகாண சட்​டப்​பேரவை​யின் 66-வது தொகுதி​யில் போட்டியிட்டார். தொழிலதிபரான இவர், சமூக நலப் பணிகளிலும் ஈடு​பட்டு வரு​கிறார். இந்​தத் தொகுதி​யில் ஏற்​கெனவே 5 முறை வெற்றி பெற்​றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்மாட் ஷஹீனைவிட சந்​தீப் ஸ்ரீவஸ்தவா பின்தங்கியுள்ளார்.

அமிஷ் ஷா

அரிசோனா மாகாணத்​தின் முதல் நாடாளு​மன்​றத் தொகுதி​யில் ஜனநாயகக் கட்சி சார்​பில் போட்​டி​யிட்ட மருத்​து​வரும், முன்​னாள் மாகாண சட்​டப்​பேரவை உறுப்​பினரு​மான அமிஷ் ஷா முன்​னிலை வகிக்​கிறார். இவர் ஏற்​கெனவே அரிசோனா மாகாண சட்​டப்​பேரவை​யில் 3 முறை உறுப்​பின​ராகப் பதவி வகித்​துள்​ளார்.

அருணா மில்​லர்

மேரிலாந்து மாகாண துணை ஆளுநராகப் பதவி வகித்து வந்த அருணா மில்​லர் மீண்​டும் அந்​தப் பத​விக்​குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்​ளார். 1964-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் பிறந்த இவர், தனது 7-வது வயதில் குடும்​பத்​துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்​தார். நகர்ப்​புறத் திட்​ட​மிடல் நிபுணரும், லாஸ் ஏஞ்​சல்ஸ் நகர கவுன்​சில் உறுப்​பினரு​மான நித்யா ராமன், அந்த நகர மேயர் தேர்​தலில் முன்​னிலை வகித்தார். இதுபோல மாகாண சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் இந்​திய வம்​சாவளி​யினர் கணிச​மான அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT