உலகம்

இந்திய நண்பர்கள் பத்திரமாக உள்ளனர்: ஈரான் உறுதி

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: இஸ்​ரேல், அமெரிக்காவின் தாக்​குதலைத் தொடர்ந்​து, சர்​வ​தேச கடல்​வழிப் போக்​கு​வரத்​துப் பாதையான ஹார்​முஸ் ஜலசந்​தி​யை ஈரான் மூடி உள்​ளது. இதனால் இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு எரிசக்தி விநியோகத்​தில் பெரும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​ட பதி​வில், "எங்​களது இந்திய நண்​பர்​கள் பாது​காப்​பான கரங்​களில் உள்​ளனர், கவலை வேண்​டாம்" என குறிப்​பிட்​டுள்​ளது.

          

உலகின் 20% எரிசக்தி விநி​யோகம் நடை​பெறும் முக்​கிய வழித்​தட​மான ஹார்​முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் உள்​ளது. கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்​து, மிகக் குறைந்த அளவி​லான கப்பல்களே இந்​தப் பாதையைக் கடக்க ஈரான் அனு​மதி அளித்​துள்​ளது. குறிப்பாக இந்​தி​யா, சீனா, ரஷ்​யா, ஈராக் மற்​றும் பாகிஸ்​தான் உள்​ளிட்ட நட்பு நாடு​களுக்கு மட்​டும் ஹார்​முஸ் வழி​யாகச் செல்ல அனு​மதி வழங்​கி​யுள்​ள​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT