வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின் லீவிட்

 
உலகம்

இந்தியா இனி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்காது: வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் தகவல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்​தி​யப் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரி 18 சதவீத​மாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்​துள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின் லீவிட் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: “இந்​தி​யா, அமெரிக்கா இடையே​யான வர்த்​தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்​ளது. இதை ஒரு மிகப்​பெரிய வெற்​றி​யாக அமெரிக்கா பார்க்​கிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிட​ம் இருந்து கச்சா எண்​ணெயை வாங்​கு​வ​தில்லை என இந்​தியா உறுதி அளித்துள்​ளது.

          

மேலும், அமெரிக்​கா, வெனிசுலா நாடு​களிட​மிருந்து இனி கச்சா எண்​ணெயை இந்​தியா வாங்​கும். ரஷ்​யா​விட​ம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்​ணெயை நிறுத்​து​வதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க பொருட்​களை இறக்​குமதி செய்​யும் எண்​ணிக்​கையை அதி​கரிக்​க​வும் இந்த ஒப்​பந்​தம் வகை செய்கிறது. வெனிசுலா​விட​ம் இருந்​தும் இந்​தி​யா, கச்சா எண்ணெயை வாங்க முடி​யும். இதனால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பலன் அடை​யும்.

இந்​தி​யா​வுடன் மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை அதிபர் ட்ரம்ப் இறுதி செய்​துள்​ளார். இதற்​காக இந்​தி​யப் பிரதமர் மோடி​யுடன் அவர் நேரடி​யாகவே பேசி உள்​ளார். மேலும், அமெரிக்க எரிசக்​தி, போக்​கு​வரத்து மற்​றும் விவ​சாயப் பொருட்​களை வாங்குவதற்காக இந்​தியா 500 பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் அளவுக்கு செல​விட​வுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT