இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

 
உலகம்

ஈரான் உடனான போரின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமீரகம் வந்தாரா?

செய்திப்பிரிவு

துபாய்: ஈரானுட​னான போரின் போது, இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்​யாகு ஐக்​கிய அரபு அமீரகத்​தின் அதிபருடன் ரகசிய சந்​திப்பை நடத்​தி​னார் என்று அவரது அலு​வல​கம் தெரிவித்​துள்​ளது.

‘சிங்​கத்​தின் கர்​ஜனை' நடவடிக்​கை​யின்போது, பிரதமர் நெதன்யாகு அமீரகத்​துக்கு ரகசிய பயணம் மேற்​கொண்​டார் என்றும் அங்கு அவர், அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்​யானை சந்​தித்​தார் என்​றும் அவரது அலு​வல​கம் தெரிவித்துள்ளது.

ஈரானுட​னான போரின்​போது, இஸ்​ரேல் தனது அயர்ன் டோம் வான் பாது​காப்பு அமைப்​பு​களை​யும் அவற்றை இயக்​கு​வதற்​கான பணி​யாளர்​களை​யும் அமீரகத்​துக்கு அனுப்​பிய​தாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்​கபீ அறி​வித்த ஒரு நாள் கழித்​து, இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது பரபரப்பை ஏற்படுத்​தி​யது.

ஹக்​கபீ​யின் கருத்​து​களை நேரடி​யாக உறு​திப்​படுத்​தா​விட்​டாலும், இந்த பயணம் “இஸ்​ரேலுக்​கும் ஐக்​கிய அரபு அமீரகத்​துக்​கும் இடையி​லான உறவு​களில் ஒரு வரலாற்று திருப்​பு​முனையை குறிக்கிறது" என்று நெதன்​யாகு​வின் அலு​வல​கம் தெரிவித்துள்ளது. இந்​நிலை​யில் ஈரானுட​னான போரின்​போது இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு ஐக்​கிய அரபு அமீரகத்துக்கு வரவில்லை என்று அந்த நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்​பாக யுஏஇ நாட்​டின் செய்தி நிறு​வன​மான டபிள்யூஏஎம் இதுதொடர்​பாக ஒரு கட்​டுரையை வெளியிட்டுள்ளது. அந்த கட்​டுரை​யில் வெளிவந்​துள்ள தகவலின்படி இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு, யுஏஇ-க்கு வரவில்லை என்று கூறப்​பட்​டுள்​ளது.

இஸ்​ரேலுட​னான உறவு​கள் வெளிப்​படை​யானவை என்​றும் அவை வெளிப்​படையற்ற அல்​லது அதி​காரப்​ பூர்​வ​மற்ற ஏற்​பாடு​களின் அடிப்​படை​யில் அமைந்​தவை அல்ல என்​றும் அந்த கட்​டுரை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT