உலகம்

புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம்

மோகன் கணபதி

புதுடெல்லி: தாயகம் திரும்புவதற்கு ஏற்ப, புதிய பாஸ்போர்ட் மற்றம் தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதியுள்ளார்.

வங்​கதேசத்​தில் 2024-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால், பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். தற்​போது அங்கு தேர்​தல் நடை​பெற்று பிஎன்பி கட்சி ஆட்​சிக்கு வந்​துள்​ளது. பிரதம​ராக தாரிக் ரகு​மான் உள்​ளார். மாணவர்​கள் போராட்​டம் அடக்​கு​முறை தொடர்​பான வழக்​கில், வங்​கதேசத்​தின் சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதில் கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு ஷேக் ஹசீனா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், குற்றவாளியான அவரை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பும்படி, அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி வருகிறது.

இதனிடையே, டாக்காவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சட்ட அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான், “என்னைப் பொறுத்தவரை, ஷேக் ஹசீனா ஒரு குற்றவாளி. எங்கள் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. இதுவே அவரைப் பற்றிய எங்களின் பார்வையாகும். ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து மீண்டும் அழைத்து வர அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

இந்தியாவுடனான நாடு கடத்தல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. உணர்ச்சிகளுக்கு இடமின்றி, சட்டப்படி இந்த விவகாரம் கையாளப்படும். ஒப்பந்தத்தின்படியும், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியும் அவரைத் திருப்பி அனுப்பக் கோரியுள்ளோம். ஷேக் ஹசீனாவை இந்தியா எங்களிடம் ஒப்படைத்தால், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய உரிய நடைமுறைகளின்படி நாங்கள் செயல்படுவோம்” என தெரிவித்திருந்தார். எனினும், வங்கதேசத்தின் கோரிக்கை விஷயத்தில் இந்தியா எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.

அதேநேரத்தில், வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்குச் செல்ல இருப்பதாக ஷேக் ஹசீனா கூறி வருகிறார். ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘என்​னைக் கொன்​றாலும் சரி, டிசம்​பரில் வங்கதேசம் செல்​வேன். மரணம்​தான் என் விதி என்​றால், என் சொந்த மண்​ணில், என் சொந்த மக்​களிடையே இறப்​ப​தையே நான் விரும்​புவேன். ஆகவே, நான் வங்​கதேசம் திரும்​பு்ம் முடி​வில் எந்த மாற்​ற​மும் இல்​லை,’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு திரும்புவதற்கான முக்கிய முயற்சியாக, புதிய பாஸ்போர்ட் கோரி ஷேக் ஹசீனா, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். லண்டனைச் சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் வழக்கறிஞர்கள், டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் பொறுப்பு ஆணையர் பிரீதி ரஹ்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை வங்கதேசத்தில் இருந்த இடைக்கால அரசாங்கம் ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, எங்கள் கட்சிக்காரருக்கு புதிய வங்கதேச பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.’ என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஷேக் ஹசீனா வங்கதேச குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையிலும், சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் கீழ் உள்ள கடமைகளுக்கு இணங்கவும் இந்த கோரிக்கையை விரைவாக பரிசீலிக்குமாறு அவர்கள் அந்த கடிதத்தில் கோரியுள்ளனர். இதனை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக டெல்லியில் உள்ள பிரீதி ரஹ்மானோ, டாக்காவில் உள்ள தாரிக் ரஹ்மானின் செய்தித் தொடர்பாளர்களோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றும் ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT