உலகம்

இந்​தோ​னேசி​யா​வில் மோடிக்கு உற்​சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: அரசு​முறைப் பயண​மாக இந்​தோ​னேசி​யா​வுக்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகார்த்​தா​வில் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. அதிபர் பிர​போவோ சுபி​யாந்​தோ, விமான நிலை​யத்​துக்கே வந்து வரவேற்​றார்.

இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி 6 நாள் அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். டெல்​லி​யில் இருந்து நேற்று புறப்​பட்ட அவர் இந்தோ​னேசியா தலைநகர் ஜகார்த்​தாவை வந்​தடைந்​தார். பிரதமர் மோடி​யின் விமானம் இந்​தோ​னேசிய வான்​பரப்​புக்​குள் நுழைந்​த​தில் இருந்​தே, இந்​தோ​னேசிய விமானப் படை​யின் போர் விமானங்​கள் பிரதமரின் விமானத்​துக்கு பாது​காப்பு அளித்​த​வாறு உடன் பறந்து வந்​தன.

இந்​தோ​னேசிய அதிபர் பிர​போவோ சுபி​யாந்​தோ, ஜகார்த்தா விமான நிலை​யத்​துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்​றார். பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. தன்னை வரவேற்​கும் வித​மாக நடை​பெற்ற கலாச்​சார நிகழ்ச்​சிகளை அவர் பார்​வை​யிட்​டார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஜகார்த்தா வந்​தடைந்​தேன். விமான நிலை​யத்​திலேயே என்னை அதிபர் பிர​போவோ வரவேற்​றது மனதை நெகிழச் செய்​தது. கடந்த 2018-ல் நாங்​கள் எங்​கள் உறவை மேம்​படுத்​தினோம். இது எங்​கள் மக்​களுக்​குப் பயனளித்​துள்​ளது. இந்த பயணத்​தில் பல்​வேறு துறை​களில் இந்​தக் கூட்​டாண்​மைக்கு மேலும் வலுசேர்க்​கும் வகை​யில் நானும், அதிபர் பிர​போவோ​வும் ஆலோ​சனை மேற்​கொள்​வோம்.

அதிபர் பிர​போவோ​வும் நானும் யோக்​யகர்த்​தா​வில் உள்ள பிரம்​பனன் கோயில் வளாகத்தை பார்​வை​யிட உள்​ளோம். இது நமது நாடு​களுக்கு இடையி​லான நெருக்​க​மான கலாச்​சா​ரத் தொடர்​பு​களை உறுதி செய்​யும். இந்​தோ​னேசி​யா​வில் இருக்​கும்​போது, இங்​குள்ள இந்​தி​யச் சமூகத்​தினருடன் கலந்​துரை​யாட​வும் நான் ஆவலுடன் காத்​திருக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா - இந்​தோ​னேசியா இடையே ராஜதந்​திர உறவு​கள் ஏற்​பட்டு 75-வது ஆண்டு நிறைவடை​யும் வேளை​யில் இப்​பயணம் அமைவ​தால், இரு நாடு​களுக்​கும் இடையி​லான ‘விரி​வான உத்​தி​சார் கூட்​டாண்​மைக்​கு’ இது கூடு​தல் வேகம் அளிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிரதமர் மோடி தனது இந்​தோ​னேசி​யப் பயணத்தை நாளை (ஜூலை 8) முடித்​துக் கொண்டு ஆஸ்​திரேலியா செல்​கிறார். அங்கு ஆஸ்​திரேலிய பிரதமர் அந்​தோனி அல்​பானிஸுடன் இணைந்து வரு​டாந்​திர உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கிறார். இந்த மாநாட்​டில், இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​து​வது குறித்து விவா​திக்​கப்​படும். குறிப்​பாக பாது​காப்பு ஒத்​துழைப்​பு, கடல்​சார் பாது​காப்​பு, முக்​கிய தாதுக்கள், தூய்​மை​யான எரிசக்​தி உள்ளிட்டவை குறித்து சிறப்பு கவனம் செலுத்​தப்​படும்.

அரசு அதி​காரி​கள் உடனான சந்​திப்​பு​கள் தவிர, ஆஸ்​திரேலிய தொழில் சமூகத்​தினர் மற்​றும் அங்கு வசிக்​கும் இந்திய வம்​சாவளி​யினரை​யும் பிரதமர் மோடி சந்​திக்க உள்​ளார்.

பிரதமர் மோடி தனது பயணத்​தின் 3-ம் கட்​ட​மாக நியூசிலாந்து செல்​கிறார். இது பிரதமர் மோடி​யின் முதல் நியூசிலாந்து பயண​மாகும். மேலும், கடந்த 40 ஆண்​டு​களுக்கு மேலாக இந்​தி​யப் பிரதமர் ஒரு​வர் அந்​நாட்​டுக்கு செல்​வது இதுவே முதல்​முறை.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சனுடன் நடத்​தும் பேச்​சு​வார்த்​தை​யில், வர்த்​தகம், விவ​சா​யம், கல்​வி, தொழில்​நுட்​பம், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி, விளை​யாட்டு போன்ற துறை​களில் ஒத்​துழைப்​பது குறித்​தும், முதலீட்டு உறவு​களை வலுப்​படுத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்​தும் பிரதமர் மோடி ஆலோ​சிக்க உள்​ளார்.

SCROLL FOR NEXT