உலகம்

யுஏஇ போரில் ஈடுபட்டால் துபாய் தகர்க்கப்படலாம்: அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரான் மீது இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் தாக்குதல் நடத்தி வரு​கின்​றன. இதையடுத்​து, இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைத்​தலங்​கள் அமைந்​துள்ள ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்​ளிட்ட வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இதுகுறித்து செய்தி நிறு​வனம் ஒன்று அளித்த பேட்​டி​யில் அமெரிக்​கா​வின் முன்​னணி பொருளா​தார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறிய​தாவது: யுஏஇ ஒரு அர்த்​தமற்ற குழப்பத்​தில் சிக்​கி​யுள்​ளது. அமெரிக்கா மற்​றும் இஸ்ரேலுடனான தனது உறவின் மூலம் செய்த தவறுகளை அது மீண்​டும் மீண்​டும் தொடர்​கிறது.

          

அடிப்படை​யில், யுஏஇ போரில் இறங்​கி​னால் துபா​யும் அபு தாபி​யும் தகர்க்​கப்​படக்​கூடும். சுற்​றுலாத் தலங்​களாக வடிவ​மைக்​கப்​பட்​ட​ இவ்​விரு நகரங்​களும் ஏவு​கணைத் தாக்​குதலைத் தடுக்​கும் பலப்​படுத்​தப்​பட்ட பகு​தி​கள் அல்ல. பணக்​காரர்​கள் பார்ட்டி செய்​வதற்​கும், முதலீடு செய்​வதற்​கு​மான இடங்​கள் இவை.

ஒரு போர் மண்​டலத்​துக்​குள் நுழைவது என்​பது துபாய் போன்ற ஒரு இடத்​தின் நோக்​கத்​தையே சிதைப்​ப​தாகும். யுஏஇ தெரிந்தே ஒரு முட்​டாள்​தன​மான குழப்​பத்​தில் சிக்கியுள்​ளது. ‘ஆபிர​காம் உடன்​படிக்​கை' மூலம் அமெரிக்கா​வுடன் இணைந்த வளை​குடா நாடு​களின் முடிவு ஒரு பேரழி​வுக்​கான அழைப்​பு.

இது அவர்​களை அமெரிக்​கப் பாது​காப்பை அதி​கம் நம்​பி​யிருக்​கச் செய்​துள்​ளது. முன்​னாள் அமெரிக்க வெளி​யுறவுச் செயலர் ஹென்றி கிஸிங்​கர் குறிப்​பிட்​டதைப் போல இது பேரழி​வுக்​கான நட்பு ஆகும். ஒவ்​வொரு நாளும் கிஸிங்​கரின் புகழ்​பெற்ற கூற்றை நான் திரும்​பத் திரும்​பக் கூறுகிறேன். அமெரிக்கா​வுக்கு எதிரி​யாக இருப்​பது ஆபத்​தானது, ஆனால் அதன் நண்​ப​னாக இருப்​பது மரணத்தை விளைவிக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT