உலகம்

அமெரிக்காவின் 10% வரிவிதிப்பு 150 நாட்களுக்கு மட்டுமே

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 122, கடந்த 1977-ம் ஆண்​டில் நிறைவேற்​றப்​பட்​டது. சர்​வ​தேச அவசர பொருளா​தார அதி​கார சட்​டம் (ஐஇஇபிஏ) என்​றழைக்​கப்​படும் இந்த சட்​டத்​தில், அமெரிக்க அதிபருக்கு சிறப்பு அதி​காரங்​கள் வழங்​கப்​பட்டு உள்​ளன.

இதன்​படி அமெரிக்க அதிப​ரால் வெளி​நாட்டு சொத்​துகளை முடக்க முடி​யும். டாலர், வங்கி பணப் பரி​மாற்​றங்​களை கட்​டுப்​படுத்த முடி​யும். இறக்​கும​தி, ஏற்​றுமதி சார்ந்த நடவடிக்​கைகளுக்கு தடை விதிக்க முடி​யும். பொருளா​தார விவ​காரங்​கள் தொடர்​பாக முக்​கிய முடிவு​களை எடுக்க முடி​யும்.

          

இந்த ஐஇஇபிஏ சட்​டத்​தின்​படியே புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு அறி​வித்​தார். தற்​போது இதே சட்​டத்​தின்​படியே அனைத்து நாடு​களுக்​கும் கூடு​தலாக 10 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்​துள்​ளார்.

ஆனால், ஐஇஇபிஏ சட்​டத்​தின்​படி வெளி​யிடப்​படும் உத்​தர​வு​கள் தற்​காலிக​மாக 150 நாட்​கள் மட்​டுமே அமலில் இருக்​கும். அதன்​பிறகு அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதலை பெற்​றால் மட்​டுமே இந்த 10 சதவீத வரியை நீட்​டிக்க முடி​யும். இல்​லை​யெனில் ட்ரம்ப் உத்​தரவு காலா​வ​தி​யாகி விடும் என்று அமெரிக்க சட்ட நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT