உலகம்

கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: கடல் கண்​ணி வெடிகள் எங்​கெல்​லாம் இருக்​கின்றன என்​ப​தைக் கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக திறப்​ப​தில் சிக்​கல் நீடிக்​கிறது.

அமெரிக்கா உடனான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி முழு​வதும் நூற்​றுக்​கணக்​கான கண்​ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி​யுள்​ளது. குறிப்​பாக கடலுக்கு அடி​யிலும், சில நூறு அடி ஆழத்​தி​லும் கடலுக்கு மேலே​யும் கண்ணி வெடிகள் வீசப்​பட்​டன. இதனால் சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுக்​குத் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

          

தற்​போது அமெரிக்கா - ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை உடன​யாக திறக்க வேண்​டும் என்று அமெரிக்கா நிபந்​தனை விதித்​துள்​ளது. இதைத் தொடர்ந்து கடலுக்கு மேலே மிதந்த கண்​ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றி உள்​ளது. ஆனால் கடலுக்கு அடி​யிலும் சில நூறு அடி ஆழத்​தி​லும் வைக்​கப்​பட்ட கண்​ணிவெடிகளைக் கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​பட்டு உள்​ளது. எங்​கெல்​லாம் கண்​ணிவெடிகள் வீசப்​பட்டன என்​பது குறித்​தும் தெளி​வான விவரங்​கள் இல்​லை.

இதனால் ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக திறப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டிருக்​கிறது. இதுதொடர்​பாக ஈரான் அரசு அண்​மை​யில் வெளி​யிட்ட அறிக்​கை​யில், வழக்​க​மான ஹார்​முஸ் ஜலசந்தி பாதையைத் தவிர்க்க அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. அதோடு எந்​தப் பாதை​யில் செல்ல வேண்​டும் என்​பது தொடர்​பான வரைபடத்​தை​யும் வெளி​யிட்​டிருக்​கிறது. இந்தப் பாதை வழி​யாக நேற்று முன்​தினம் 10 எண்​ணெய் கப்​பல்​கள் மட்​டும் கடந்து சென்​றன.

இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்​குதலை தொடங்​கிய உடன், ஈரான் ராணுவத் தரப்​பில் ஹார்​முஸ் ஜலசந்தி முழு​வதும் சிறிய ரக படகு​கள் மூலம் கடல் கண்​ணிவெடிகள் வீசப்​பட்​டன. அவற்றை முறை​யாக அகற்​றும் தொழில்​நுட்​பம் ஈரானிடம் இல்​லை.

அமெரிக்கா மற்​றும் அதன் நட்பு நாடு​களிடம் மட்​டுமே கடல் கண்​ணிவெடிகளை அகற்​றும் சிறப்பு கப்​பல்​கள் உள்​ளன. ஆனால், அந்த கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் நுழைய ஈரான் ராணுவம் தடை விதித்​துள்​ளது. இதன் காரண​மாக இந்த ஜலசந்​தி​யின் மிக குறுகிய பாதை வழி​யாகவே கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெறுகிறது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

SCROLL FOR NEXT