உலகம்

டென்மார்க் உட்பட 8 நாடுகளுக்கு 10% கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு

கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்தை எதிர்க்கும் நாடுகள்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: “கிரீன்​லாந்தை விலைக்கு வாங்​கும் எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் டென்​மார்க், பிரிட்​டன், பிரான்ஸ் ஆகிய நாடு​களுக்கு கூடு​தலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்​துள்​ளார்.

டென்​மார்க் நாட்​டின் தன்​னாட்சி பெற்ற பிராந்​தி​ய​மாக கிரீன்லாந்து உள்​ளது. இந்​நிலை​யில், ஆர்க்​டிக் பகு​தி​யில் அச்சுறுத்தலாக உள்ள சீனா, ரஷ்​யா​விடம் இருந்து அமெரிக்​காவைப் பாது​காக்க, எங்களுக்கு கிரீன்​லாந்து வேண்​டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​னார். மேலும், கிரீன்​லாந்​தில் உள்ள ஒவ்​வொரு​வருக்​கும் கணிச​மான தொகை அளிப்​ப​தாக​வும் அறிவித்​தார். ஆனால், ட்ரம்ப்புக்கு டென்​மார்க் பிரதமர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், கிரீ​ன்லாந்தை கைப்​பற்​றும் திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் டென்​மார்க், பிரிட்​டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடு​களுக்கு 10 சதவீதம் கூடு​தலாக வரி விதிக்கப்படும். அந்த கூடு​தல் வரி பிப்​ர​வரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும், கிரீன்​லாந்தை அமெரிக்கா வாங்​கும் ‘டீல்’ சுமுக​மாக முடியா​விட்​டால், ஜூன் 1-ம் தேதி முதல் வரி 25 சதவீத​மாக உயர்த்தப்​படும் என்று தனது ட்ரூத் சமூக வலை​தளத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்​று​ முன்​தினம் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து டென்​மார்க் கூறுகை​யில், “அ​திபர் ட்ரம்ப் அறி​விப்பை தொடர்ந்து நட்பு நாடு​களு​டன் இணைந்து கிரீன்​லாந்​தில் கூடு​தல் ராணுவம் குவிக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளது. “கிரீன்லாந்து விற்​பனைக்கு அல்ல. எங்​கள் நாட்டை நாங்​களே நிர்வகித்​துக் கொள்​வோம்” என்று அந்​நாட்டு மக்​கள் அமெரிக்காவுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டங்​களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிரிட்​டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மெர் கூறும்​போது, “அதிபர் ட்ரம்ப்​பின் முடிவு முழு​வது​மாக தவறு. கிரீன்​லாந்து விவ​காரத்​தில் எங்​கள் நிலைப்​பாடு மிக​வும் தெளி​வாக உள்​ளது. இந்த விவ​காரத்​தில் முடி​வெடுக்க வேண்​டியது டென் ​மார்க்​கும், கிரீன்லாந்​தும்​தான். ஆர்க்​டிக் பகு​தி​யில் ரஷ்​யா​வின் அச்​சுறுத்​தல் ஒட்டுமொத்த நேட்டோ நாடு​களுக்​கும்​தான். அதை எதிர்​கொள்ள நேட்டோ நாடு​கள் ஒன்​றிணைந்து செயல் பட வேண்​டும்” என்றார்.

பிரான்ஸ் அதிபர் இமானு வேல் மேக்​ரான் கூறும்​போது, “அ​திபர் ட்ரம்ப்​பின் முடிவை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. எந்​த​வித மிரட்டலுக்​கும் நாங்​கள் அஞ்ச மாட்​டோம்” என்​றார்.

ட்ரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பாதிக்கும் என்று ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன், ஐரோப்​பிய ஒன்​றிய கவுன்​சில் தலை​வர் அன்​டோனியோ கோஸ்டா ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT