உலகம்

சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில் ரூ.15,000 கோடிக்கு பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: தமிழகத்​தின் தஞ்​சாவூரை பூர்வி​க​மாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு (58), சென்னை ஐஐடி-யில் பயின்று உயர் கல்விக்​காக அமெரிக்​கா​வின் பிரின்​ஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்​தார். அங்கு கடந்த 1994-ல் பிஎச்டி பட்​டம் பெற்​றார். 1996-ல் கலி​போர்​னி​யா​வில் அட்​வென்ட்​நெட் நிறு​வனத்தை தொடங்​கி​னார். கடந்த 2009-ல் நிறு​வனத்​தின் பெயர் சோஹோ என்று மாற்​றம் செய்​யப்​பட்​டது.

கடந்த 1993-ம் ஆண்​டில் பிரமிளா சீனி​வாசனை, ஸ்ரீதர் வேம்பு திரு​மணம் செய்​தார். இத்​தம்​ப​திக்கு ஒரு மகன் உள்​ளார். கடந்த 2019-ல் தமிழ்​நாட்​டுக்கு ஸ்ரீதர் வேம்பு திரும்​பி​னார். கடந்த 2021-ல் அவர் தனது மனை​வி​யிடம் இருந்து விவாகரத்து கோரி​னார்.

இந்த வழக்கு கலி​போர்​னியா நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. கடந்த சில நாட்​களுக்கு முன்பு வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, பிரமிளா சீனி​வாசனின் உரிமை​களைப் பாது​காக்க ஸ்ரீதர் வேம்பு ரூ.15,000 கோடிக்​கான பத்​திரத்தை தாக்​கல் செய்ய வேண்​டும் என்று நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

ஸ்ரீதர் வேம்பு தொடங்​கிய சோஹோ கார்ப்​பரேசன் நிறு​வனத்​தின் சந்தை மதிப்பு ரூ.1.04 லட்​சம் கோடி ஆகும். இந்த நிறு​வனத்​தில் தற்​போது அவர் 5 சதவீத பங்​கு​களை மட்​டுமே வைத்​திருக்​கிறார். அவரது தங்கை ராதா வேம்பு 47.8%, தம்பி சேகர் வேம்பு 35.2%, டோனி தாமஸ் 8% பங்​கு​களை வைத்து உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாண சட்ட விதி​களின்​படி விவாகரத்து வழக்​கு​களில் ஒரு நபர் தனது சொத்​தில் 50 சதவீதத்தை மனை​விக்கு ஜீவ​னாம்​ச​மாக வழங்க வேண்​டும். இதன்​படி ஸ்ரீதர் வேம்​பு, சோஹோ கார்ப்​பரேசன் நிறு​வனத்​தில் தனக்​குள்ள பங்​கு​களில் 50 சதவீதத்தை மனை​விக்கு ஜீவ​னாம்​ச​மாக வழங்க முன்​வந்​துள்​ளார். ஆனால் இதை அவரது மனைவி பிரமிளா சீனி​வாசன் ஏற்​க​வில்​லை. அவர் நீதி​மன்​றத்​தில் முன்​வைத்​துள்ள வாதத்​தில், “சோஹோ நிறு​வனத்​தில் தர் வேம்​புக்கு 88% பங்​கு​கள் உள்​ளன. அதில் தனக்கு 50% வழங்க வேண்​டும்” என்று கோரி​யுள்​ளார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட பிறகு ரூ.15,000 கோடிக்​கான பத்​திரத்தை தாக்​கல் செய்ய வேண்​டும் என்று கலி​போர்​னியா நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்​ளது.

SCROLL FOR NEXT