உலகம்

உண்​மை​யான உறவை பேண வேண்​டும்: பிரிட்டன் பிரதமரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பெய்​ஜிங்: தடையற்ற வர்த்​தகத்​தின் ஆதர​வாளர்​களான சீனா​வும் பிரிட்​ட​னும் இணைந்து உண்​மை​யான பன்​முகத்​தன்மை உறவை ஆதரித்து செயல்பட வேண்​டும் என்று பிரிட்​டன் பிரதமர் கீர் ஸ்டார்​மரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

பிரிட்​டன் பிரதமர் கீர் ஸ்டார்​மர் சீனா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். எட்டு ஆண்​டு​களுக்​குப் பிறகு பிரிட்​டன் பிரதமர் ஒரு​வர் சீனா​வுக்​குப் பயணம் மேற்​கொள்​வது இதுவே முதல்​முறை. பெய்​ஜிங்​கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்​பிள்’ வளாகத்​தில் நடை​பெற்ற இந்​தச் சந்​திப்​பின்​போது அதிபர் ஜி ஜின்​பிங் கூறிய​தாவது: சர்​வ​தேச சட்​டங்​களை அனைத்து நாடு​களும் மதித்து கடைபிடித்​தால் மட்​டுமே அவை உண்​மை​யிலேயே பயனுள்​ள​தாக இருக்​கும்.

          

குறிப்​பாக, பெரிய நாடு​கள் இதில் மற்ற நாடு​களுக்கு முன்​மா​திரி​யாகத் திகழ வேண்​டும். தவறி​னால், உலகம் மீண்டும் காட்​டாட்சி சட்​டத்​தின் பிடி​யில் சிக்க நேரிடும். சீனாவைப் பொருத்​தவரை அது எவ்​வளவு பெரிய வளர்ச்சி அடைந்​தா​லும், மற்ற நாடு​களுக்கு ஒரு​போதும் அச்​சுறுத்​தலாக இருக்​காது. இவ்​வாறு ஜி ஜின்​பிங் தெரி​வித்​தார்.

சீன அதிபருட​னான சந்​திப்பு குறித்து லண்​டனில் உள்ள பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கும் வகை​யில் சீரான, நீண்டகால மற்​றும் வியூக ரீதியி​லான கூட்​டாண்​மையை உரு​வாக்க இரு நாட்டு தலை​வர்​களும் உறுதிபூண்டுள்ளனர். கருத்து வேறு​பாடு​கள் உள்ள துறைகளில் வெளிப்​படை​யான பேச்​சு​வார்த்​தையைத் தொடர அவர்​கள் ஒப்​புக்​கொண்​டனர். பரஸ்பர நலன் சார்ந்த துறை​களில் ஒத்​துழைப்பை அதி​கரிக்​க​வும் இந்த சந்​திப்​பின்​போது உடன்​பாடு எட்​டப்​பட்​டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT