உலகம்

ட்ரம்ப்புக்கு ஜி ஜின்பிங் வைத்த கோரிக்கை: சீனா - அமெரிக்கா உறவில் திடீர் திருப்பம்

வேட்டையன்

வாஷிங்டன்: சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்புக்கு சீன அதிபர் வைத்த இந்தக் கோரிக்கையால் சீனா - அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக புவி அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.

பத்​தாண்​டு​களுக்​கும் மேலான இடைவெளிக்​குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்​பிங் 3 நாள் பயண​மாக அமெரிக்கா சென்​றுள்​ளார். தனி விமானம் மூலம் வாஷிங்​டன் அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்​ரூஸ் விமானப்​படைத் தளத்​துக்கு நேற்று வருகை தந்த ஜி ஜின்​பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்​றார்.

இந்நிலையில், அதிபர் ஜி ஜின்பிங்கின் கருத்து செய்தியாக வெளியிட்டுள்ள சீன அரசு செய்தி நிறுவனமான Xinhua. “நமது இரண்டு நாடுகளும் போட்டியாளர்களாக இருப்பதை விட கூட்டாளிகளாக இருக்க வேண்டும். சீனா மற்றும் அமெரிக்க மக்கள் நீண்ட கால நட்புறவை கொண்டுள்ளனர்.

அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பில் இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய சூழல் குறித்து பேச உள்ளோம். கூட்டாண்மை மூலம் நிலையான உறவு, எல்லைக்கு உட்பட்ட போட்டி, கையாளக்கூடிய வகையிலான கருத்து வேறுபாடு இதில் முக்கியம்” என்று தெரிவித்துள்ளது.

இதை ஏற்கும் வகையில் ட்ரம்ப் பேசியுள்ளார். சீனா மற்றும் அமெரிக்காவின் வல்லமை மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இது நம் இலக்குகளை அடைய உதவும். இதற்கு சரியான பாதை வகுப்பது அவசியம். இந்த கூட்டு முயற்சியின் மூலம் அதன் பலன், மக்களின் நலன் மற்றும் உலக அமைதியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று நம்புவதாக அவர் கூறியதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT