உலகம்

க​னடா பிரதமர் இன்று இந்தியா வருகை

செய்திப்பிரிவு

ஒட்​டாவா: க​னடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்​கள் அரசு முறை பயண​மாக இன்று இந்​தியா வரு​கிறார். இந்​தி​யா - கனடா இடையே நெருங்​கிய நட்​புறவு நீடித்து வந்​தது. ஆனால் கனடா முன்​னாள் பிரதமர் ஜஸ்​டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்​தான் தீவிர​வாதி ஹர்​தீப் சிங் நிஜ்ஜார் மர்​ம​மான முறை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

இந்த கொலை​யில் இந்​திய தூதரக அதி​காரி​களுக்கு தொடர்பு இருப்​ப​தாக அப்​போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டினார். இதனால் இரு நாடுகளிடையே உறவு சிக்கலானது. இதனிடையே ஆளும் லிபரல் கட்​சி​யில் ஜஸ்​டினுக்கு எதி​ராக பலரும் போர்க்​கொடி உயர்த்​தி​ய​தால் கடந்த 2025 மார்ச் மாதம் அவர் பிரதமர் பதவியை ராஜி​னாமா செய்​தார்.

          

இதைத் தொடர்ந்து லிபரல் கட்​சியை சேர்ந்த மூத்த தலைவர் மார்க் கார்னி கனடா​வின் புதிய பிரதம​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதன்​பிறகு கனடா, இந்​தியா இடையி​லான நல்​லுறவு மீண்​டும் புதுப்​பிக்​கப்​பட்​டது.

சில மாதங்​களுக்கு முன்பு இந்​திய வம்​சாவளியை சேர்ந்த கனடா வெளி​யுறவு அமைச்​சர் அனிதா ஆனந்த், டெல்லியில் பிரதமர் மோடியை சந்​தித்​துப் பேசி​னார். இதைத் தொடர்ந்து கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயண​மாக இன்று இந்​தியா வருகிறார். மும்​பை​யில் தரை​யிறங்​கும் அவர் இன்​றும் நாளை​யும் பல்​வேறு நிறு​வனங்​களின் சிஇஓக்​கள், தொழில்​துறை நிபுணர்​களை சந்​தித்​துப் பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். மார்ச் 2-ம் தேதி பிரதமர் மோடியை சந்​தித்து பேச உள்ளார். அப்​போது வர்த்​தகம், முதலீடு, எரிசக்​தி, அரிய வகை கனிமங்​கள், விவ​சா​யம், கல்​வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இருதரப்பு ஒத்​துழைப்பை அதி​கரிப்​பது குறித்து ஆலோசனை நடத்​தப்பட உள்​ளது.

பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கசப்​புணர்​வு​களை மறப்போம் கனடா அரசின் மூத்த அதி​காரிஅந்த நாட்​டின் முன்​னணி நாளிதழுக்கு அளித்த பேட்​டி​யில், ‘‘கனடா, இந்தியா இடையி​லான பழைய கசப்​புணர்​வு​களை இப்​போது மறந்​து​விடலாம்.

இப்​போது இரு நாடு​களின் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர்கள் ஆக்​கப்​பூர்​வ​மான பேச்​சு​வார்த்தை நடத்தி வருகின்​றனர். கனடா​வில் நடை​பெற்ற வன்​முறை சம்​பவங்​களில் இந்​தி​யா​வுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் உறு​தி​யாக நம்​பு​கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT