உலகம்

பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா - பின்னணி என்ன?

செய்திப்பிரிவு

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று பதவியை ராஜினாமா செய்​தார். புதிய பிரதமரை தேர்வு செய்​வதற்​கான நடை​முறை​களை தொடங்க ஆளும் தொழிலா​ளர் கட்​சியை அவர் கேட்​டுக் கொண்​டார்.

கடந்த 2024-ம் ஆண்​டில் நடை​பெற்ற பிரிட்​டிஷ் நாடாளு​மன்ற தேர்​தலில் தொழிலா​ளர் கட்சி வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​தது. அதே ஆண்டு ஜூலை 5-ம் தேதி அந்த கட்​சி​யின் தலை​வர் கீர் ஸ்டார்​மர் பிரதம​ராக பதவி​யேற்​றார். அவர் பதவி​யேற்ற பிறகு அமெரிக்கா​வுக்​கான பிரிட்​டிஷ் தூத​ராக பீட்​டர் மண்​டல்​சனை நியமித்​தார்.

எப்​ஸ்​டீன் கோப்​பு​கள் பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கடந்த பிப்​ர​வரி​யில் பீட்​டர் கைது செய்​யப்​பட்​டார். அப்​போது பிரதமர் கீர் ஸ்டார்​மருக்கு எதி​ராக ஆளும் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு எழுந்​தது. மேலும் தேர்​தலின்​போது பிரிட்​டிஷ் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்​து​வேன் என்று தொழிலா​ளர் கட்சி வாக்​குறுதி அளித்​தது. ஆனால் ஸ்டார்​மர் ஆட்​சி​யில் பிரிட்​டனின் பொருளா​தா​ரம் எதிர்​பார்த்த வளர்ச்​சியை எட்​ட​வில்​லை. பிரிட்​டனின் தேசிய சுகா​தார சேவை​யிலும் பல்​வேறு குளறு​படிகள் ஏற்​பட்​டன.

பிரதமர் ஸ்டார்​மரின் ஆட்சி நிர்​வாகத்தை எதிர்த்து சுகா​தார அமைச்​சர் வெஸ் ஸ்டீரிட்​டிங், பாது​காப்பு அமைச்​சர் ஜான் ஹீலி ஆகியோர் பதவியை ராஜி​னாமா செய்​தனர். தொழிலா​ளர் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் பலரும் பதவியை அடுத்​தடுத்து ராஜி​னாமா செய்​தனர். அண்​மை​யில் நடந்த உள்​ளாட்சி தேர்​தலில் ஆளும் கட்சி பெரும் பின்​னடைவை சந்​தித்​தது.

இவை உள்​ளிட்ட காரணங்​களால் பிரிட்​டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று பதவி வில​கி​னார். தலைநகர் லண்​டனில் உள்ள இல்​லத்​தில் அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: எனது தலைமை குறித்து தொழிலா​ளர் கட்​சி​யில் பல்​வேறு கேள்வி​கள் எழுப்பப்பட்டன. எனவே தொழிலா​ளர் கட்​சி​யின் தலை​வர் பதவியில் இருந்​தும், பிரதமர் பதவி​யில் இருந்​தும் வில​கு​கிறேன்.

புதிய பிரதமரை தேர்வு செய்​வதற்​கான வேட்பு மனு தாக்​கல் ஜூலை 9-ம் தேதி தொடங்​கும். கடைசி நாள் ஜூலை 16. செப்டம்பரில் நாடாளு​மன்​றம் கூடு​வதற்கு முன்​பாக புதிய பிரதமர் தேர்வு செய்​யப்​படு​வார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

புதிய பிரதமர் பர்ன்​ஹாம்?

பிரிட்​டனின் புதிய பிரதமர் பதவிக்​கான போட்​டி​யில் தொழிலாளர் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆன்டி பர்ன்​ஹாம் முன்னணி​யில் உள்​ளார். அவரது ஆதர​வாளர் ஜோஸ் சைமன்ஸ் அண்​மை​யில் மேக்​கர்​பீல்டு தொகுதி எம்பி பதவியை ராஜி​னாமா செய்​தார். அந்த தொகு​தி​யில் நடை​பெற்ற இடைத்​தேர்​தலில் ஆன்டி பர்ன்​ஹாம் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT