உலகம்

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு வங்கதேச தேசியவாத கட்சி நன்றி

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேச நாடாளு​மன்ற தேர்​தலில், வங்​கதேச தேசி​ய​வாத கட்சி (பிஎன்​பி) மூன்​றில் இரண்டு பங்கு பெரும்​பான்மை பெற்று ஆட்​சியை கைப்​பற்​றி​யுள்​ளது.

இதையடுத்து. பிஎன்பி தலை​வர் தாரிக் ரஹ்​மானை தொலைபேசி​யில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கட்​சி​யின் வெற்​றிக்கு வாழ்த்து தெரி​வித்தார். இருதரப்பு உறவு​களை வலுப்​படுத்​து​வ​தில் இந்​தி​யா​வின் உறு​திப்​பாட்டையும் தெரி​வித்​தார்.

          

இதுகுறித்து அக்​கட்சி வெளி​யிட்​டுள்ள சமூக ஊடகப் பதி​வில், “வங்கதேச நா​டாளு​மன்ற தேர்​தல்​களில் பிஎன்​பி​ உறு​தி​யான வெற்​றியைப் பெறு​வ​தில் தாரிக் ரஹ்​மானின் தலை​மையை நீங்​கள் பாராட்​டியதற்கு மிக​வும் நன்​றி. வங்​கதேச மக்​கள் எங்​கள் தலை​மை​ மீதும் ஜனநாயக நடை​முறை​கள் மீதும் வைத்​துள்ள நம்​பிக்​கையை இந்த முடிவு பிர​திபலிக்​கிறது.

பரஸ்பர மரி​யாதை, பரஸ்​பரம் கவலைகளுக்கு செவி​சாய்த்​தல் மற்​றும் நமது பிராந்​தி​யத்​தின் அமை​தி, ஸ்திரத்​தன்மை மற்​றும் செழிப்​புக்​கான அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றால் வழிநடத்​தப்​படும் நமது பன்​முக உறவை மேம்​படுத்த இந்​தி​யா​வுடன் ஆக்​கப்​பூர்​வ​மாக ஒத்​துழைப்பை எதிர்​நோக்​கு​கிறோம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT