உலகம்

இஸ்ரேல் சுதந்திர தின விழா: மோடிக்கு நெதன்யாகு அழைப்பு

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கும் பெரிய கவுரவம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வில் பங்​கேற்று தீபம் ஏற்ற வேண்​டும் என்று இந்​திய பிரதமர் நரேந்​திர மோடிக்கு, பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அழைப்பு விடுத்​துள்​ளார். அதேபோல், இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ரை​யும் கவுர​விக்​கும் வகை​யில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் நிறு​வனத்​தின் விமானம் பயணிகளு​டன் புறப்​பட்​டது. இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சார், ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் விமானத்தை இயக்​கினர்.

நடுவானில் பறந்த போது துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி பின்​னால் இருந்து இந்​திய பைலட் மச்​சா​ரைத் திடீரென கோடாரியால் தாக்​கினார். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் ரத்த வெள்​ளத்​தில் சரிந்​தார்.

அவரது மண்டை ஓடு உடைந்​தது. உயிர் போகும் தரு​வாயிலும் இந்​திய பைலட் மச்​சார், துணை பைலட் உடன் துணிச்​சலாக போராடினார். மிகுந்த சிரமப்​பட்டு மச்சார் அறைக் கதவைத் திறந்​தார். அவரது சத்​தம் கேட்​டதும் பயணிகள் சிலர் விரைந்து சென்று துணை பைலட்டை மடக்​கிப் பிடித்​தனர்.

இதன் பின்​னர் விமானத்​தில் பயணம் செய்த பைலட்​டுகள் சிலர் மேற்​கொண்டு விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலை​யத்​தில் பத்​திர​மாக தரையிறக்​கினர். இதற்​கிடை​யில், ரத்த வெள்​ளத்​தில் கிடந்த இந்​திய பைலட் மச்​சா​ருக்கு விமானத்​தில் பயணித்த பல் மருத்​து​வர் முதலுதவி சிகிச்சை அளித்து ரத்​தப் போக்கை கட்​டுப்​படுத்​தினார்.

அந்த விமானத்​தில் மொத்​தம் 180 பேர் பயணம் செய்​தனர். இதில் 166 பேர் இஸ்ரேலியர்​கள். இந்​திய பைலட் மச்​சா​ரின் வீரம், விவேகத்​தால் இஸ்ரேலியர்​கள் உட்​பட அனைத்து பயணிகளும் உயிர் தப்​பினர். விமானத்​தைக் கடத்தி டெல் அவிவ் நகர் விமான நிலை​யம் அல்​லது அந்த நகரின் உயர​மான கட்​டிடம் மீது மோதி மிகப்​பெரிய தீவிர​வாத தாக்​குதல் நடத்த ஓமன் துணை பைலட் ஹமாமி சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​தார். அந்த சதித் திட்​டம் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​பட்​டது.

இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ரின் வீரத்தை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு பலமுறை பாராட்டி பேசி​யிருந்​தார். இந்​தச் சூழலில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது​குறித்து அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது நண்​பர் பிரதமர் நரேந்​திர மோடியுடன் தொலைபேசி​யில் பேசினேன். இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வில் தீபம் ஏற்ற அவருக்கு அழைப்பு விடுத்​தேன். அதோடு இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ருக்​கும் தீபம் ஏற்ற அழைப்பு விடுத்​திருக்​கிறேன்.

எனது அழைப்​புக்​குப் பிரதமர் நரேந்​திர மோடி நன்றி தெரி​வித்​தார். இந்​தி​யா​வும் இஸ்ரேலும் இணைந்து தீவிர​வாதத்​துக்கு எதிராக போரிடும் என்று மோடி உறுதி அளித்​தார். இரு நாடுகள் இடை​யி​லான உறவை மேலும் வலுப்​படுத்​தவும் அவர் உறுதி​யேற்​றார். இவ்​வாறு பெஞ்​சமின் நெதன்​யாகு தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இஸ்​ரேல் பிரதமர் என்னை தொலைபேசி​யில் அழைத்​துப் பேசினார். இருநாடுகள் இடை​யி​லான உறவை மேலும் வலுப்​படுத்​து​வது குறித்து இரு​வரும் விரிவான ஆலோ​சனை நடத்​தினோம். மேற்கு ஆசி​யாவில் அமைதியை நிலைநாட்​டுவது குறித்​தும் ஆலோ​சித்​தோம்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தீபம் ஏற்​றும் நிகழ்ச்சி: இஸ்​ரேல் நாள்​காட்​டி​யின்​படி ‘இயார்’ மாதத்​தின் 5-ம் நாளில் இஸ்ரேலின் சுதந்​திர தினம் கொண்​டாடப்​படு​கிறது. இத​னால் ஆங்​கில நாள்​காட்​டி​யின்​படி இஸ்ரேலின் சுதந்​திர தினம் ஆண்​டுதோறும் வெவ்​வேறு நாட்​களில் கொண்​டாடப்​படு​கிறது.

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்​ரல் 30-ம் தேதி இரவு தொடங்கி மே 1-ம் தேதி வரை இஸ்​ரேல் சுதந்​திர தினம் கொண்​டாடப்​பட்​டது. நடப்பு ஆண்​டில் கடந்த ஏப்​ரல் 21-ம் தேதி இரவு தொடங்கி 22-ம் தேதி வரை சுதந்​திர தின விழா நடை​பெற்​றது. வரும் 2027-ம் ஆண்​டில் மே 11-ம் தேதி இரவு தொடங்கி 12-ம் தேதி வரை இஸ்​ரேல் சுதந்​திர தின விழா கொண்​டாடப்​பட உள்​ளது.

இந்த விழா ஜெருசலேமில் உள்ள ஹெர்​சல் மலே சதுக்​கத்​தில் நடை​பெறும். அப்​போது இஸ்ரேலின் 12 கோத்​திரங்​கள் சார்​பில் 12 தீபங்​கள் ஏற்​றப்​படும். இதற்​காக 12 கோத்​திரங்​களின் தலை​வர்​கள் ஒன்​றுகூடி இஸ்ரேலின் நலனுக்​காகப் பாடு​பட்ட உள்​நாட்டு தலை​வர்​கள், தனி நபர்​களைத் தீபம் ஏற்ற தேர்வு செய்​வார்​கள்.

பொது​வாக இஸ்​ரேல் சுதந்​திர தின விழாவுக்கு வெளி​நாட்டு தலை​வர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​படுவது இல்லை. இதேபோல வெளி​நாட்டு தலை​வர்​கள் தீபம் ஏற்​று​வதும் மிகவும் அரிதான நிகழ்வு ஆகும். தீபம் ஏற்​றும் நபர்​களே இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வின் சிறப்பு விருந்​தினர்​களாகப் போற்​றப்​படு​கின்​றனர்.

கடந்த ஏப்​ரலில் நடந்த இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வில் முதல்​முறை​யாக அர்​ஜென்​டினா அதிபர் ஜாவியர் மிலே தீபம் ஏற்​றினார். இதன்​மூலம் இஸ்ரேலில் தீபம் ஏற்​றிய முதல் வெளி​நாட்டு தலை​வர் என்ற பெரு​மையை அவர் பெற்​றார்.

இந்​தச் சூழலில் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வில் தீபம் ஏற்ற இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ருக்கு அதி​காரப்​பூர்​வ​மாக அழைப்பு விடுக்​கப்​பட்டு உள்​ளது. குறிப்​பாக பிரதமர் நரேந்​திர மோடி இஸ்​ரேல் சுதந்​திர தின விழா​வின் சிறப்பு விருந்​தின​ராகக் கவுர​விக்​கப்​படுவார் என்று இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இஸ்​ரேல் மக்​கள் நன்​றிக்​கடன்: இஸ்​ரேல் விமான பயணிகளின் உயிர்​களைக் காப்​பற்​றிய இந்​திய பைலட் ஸ்​மித் மச்​சா​ருக்கு அந்த நாட்டு மக்​கள் நன்​றிக் கடன் செலுத்தி வரு​கின்​றனர்.

இஸ்ரேலின் அஷ்​டோத் நகரின் நுழைவு வாயி​லான அத்​ஹலோம் பகுதி​யில் மச்​சாரை பாராட்டி மிகப்​பெரிய பதாகை வைக்​கப்​பட்டு உள்​ளது. இஸ்​ரேல் தேசிய நெடுஞ்​சாலை​யில் வைக்​கப்​பட்டு உள்ள இந்த பதாகை​யில், “ஹீரோவுக்கு நன்றி” என்று இந்​தி​யிலும், ஹீப்ரு மொழி​யிலும் எழுதப்​பட்டு உள்​ளது. இந்த பதாகை​யில் இந்​திய, இஸ்​ரேல் கொடிகளும் அச்​சிடப்​பட்டு இருக்​கிறது. இஸ்ரேலின் சமூக வலை​தளங்​களி​லும் மச்​சார் குறித்த புகைப்​படங்​கள், வீடியோக்​களின் பதிவு​கள் பர​விக் கிடக்​கிறது.

ஸ்மித் மச்​சா​ரால் சாதகம்: இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தல் வரும் 27-ம் தேதி நடை​பெறுகிறது. இந்​தத் தேர்​தலில் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு தலை​மையி​லான ‘லிகுட்’ கட்​சிக்​கும் பல்​வேறு எதிர்க்​கட்​சிகள் ஒன்​றிணைந்த ‘டுகெதர்’ கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி நில​வு​கிறது. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஃபிளை துபாய் விமானம் கடத்​தப்​பட்டு இருந்​தாலோ அல்​லது டெல் அவிவ் நகர் மீது மோதி தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருந்​தாலோ ஆளும் லிகுட் கட்​சிக்கு பெரும் பின்​னடைவு ஏற்​பட்டு இருக்​கும். ஆனால், இந்​திய விமானி ஸ்​மித் மச்​சா​ரின் வீரத்​தால் விமானக் கடத்​தல் முயற்சி முறியடிக்​கப்​பட்​டது. இது பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வின் லிகுட் கட்​சிக்​குச் சாதக​மான சூழலை உரு​வாக்கி உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT