உலகம்

ஊடுருவல்காரரை சிறைபிடித்ததற்கு பழிவாங்க இந்திய விவசாயியை கடத்தி சென்ற வங்கதேசத்தினர்

செய்திப்பிரிவு

டாக்கா: மேற்​கு​வங்க மாநிலம், ஜல்​பைகுரி மாவட்​டம், தசார் பாரா கிராமத்​தைச் சேர்ந்த தேயிலை விவசாயி​ தீபங்​கர் கோபே, 2 நாட்​களுக்கு முன்பு சவுல்​ஹாட்டி எல்லை வேலி​யில் இருந்து 150 அடி தூரத்​தில் தனது தேயிலைத் தோட்​டத்​தில் பணி​யில் ஈடுபட்டிருந்​தார். அப்​போது சுமார் 20 பேர் கொண்ட கும்​பல் அவரை சிறைப்​பிடித்​துச் சென்​ற​து்.

அந்​தக் கும்​பல், கோபேவை சர்​வ​தேச எல்​லை​யைத் தாண்டி வங்கதேச எல்​லைப் பாது​காப்​புப் படை​யிடம் ஒப்​படைத்​த​தாக கூறப்​படு​கிறது. இச்​சம்​பவத்​துக்​கு, 2 நாட்​களுக்கு முன்​பு, சவுல்ஹாட்டி எல்​லைப் பகு​தி​யில் கம்பி வேலியை வெட்டி இந்தியா​வுக்​குள் நுழைய முயன்ற வங்​கதேச நபர் ஒரு​வரை, எல்லைப்பாது​காப்பு படை வீரர்​கள் சிறை பிடித்​துள்ளனர்.

இதற்கு பழி​வாங்​கும் வகை​யிலேயே கோபே கடத்​தப்​பட்​ட​தாக அவரது குடும்​பத்​தினர் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். மேலும், கோபே பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளி​யாகி​யுள்​ளது. அதில், வங்கதேசத்​தைச் சேர்ந்த ஊடுருவல்காரர் தமிஸ் உத்​தீனை இந்தியா விடு​வித்​தால், தானும் விடுவிக்​கப்​படு​வேன் என்று பேசியுள்​ளார். கோபேவை விடுவிக்க எல்​லைப் பாது​காப்பு படை நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இந்​தச் சம்​பவத்​தால் இந்​தி​யா-வங்​கதேச எல்​லை​யோர கிராமங்​களில்​ பதற்​றம்​ நில​வுகிறது.

SCROLL FOR NEXT