அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

 
உலகம்

“இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது” - ட்ரம்ப் குற்றச்சாட்டு

வேட்டையன்

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து வெளியேற முயன்ற இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த சூழலில் ட்ரம்ப் அதற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என அதில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

பசிபிக் கடல் பகு​தி​யில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்​தப்​பட்ட ‘செட்​டெபெல்​லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து ஈரான் துறை​முகத்​துக்கு நுழைய முயன்​றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்​பலுக்கு பிறப்​பித்த அறி​வுறுத்​தல்​களை பின்​பற்​றாமல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்க முயன்​ற​தாக அமெரிக்க ராணுவம் குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இதையடுத்து இந்த கப்​பலின் இன்​ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்​கியது. இதில் இந்​திய மாலுமிகள் ஆதித்ய சர்​மா, சிவானந்த் சவுரேஷி​யா, தலைமை பொறி​யாளர் பட்​னாலா சுரேஷ் ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோ​வால் கூறுகை​யில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​தது துரதிர்ஷ்டவசமானது.

இந்த துயர​மான நேரத்​தில் உயி​ரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்​கிறது. மீட்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள் உடனடி​யாக நாடு திரும்​புவதை உறுதி செய்ய அதிகாரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். உயி​ரிழந்த மாலுமிகளின் உடல்​கள் இறுதிச் சடங்​கு​களுக்​காக உடனடி​யாக இந்​தியா கொண்டு வரப்​படும்’’ என்​றார்.

இந்​தியா கண்​டனம்

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கப்​பல்​கள் மீது நடத்​தப்​படும் தாக்குதல் மிகுந்த கவலை​யளிப்​ப​தாக குறிப்​பிட்​டுள்ள இந்​தி​யா, இப்பகு​தி​யில் போர் பதற்​றம் உடனடி​யாக குறைய வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள அமெரிக்கதூதரை அழைத்​து, இந்​திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்​கு தனது கடும்​ கண்​டனத்​தை தெரி​வித்​தது.

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்

அமெரிக்காவுடன் ஈரான் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தம் தொடர்பான வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் வரைவில், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.

ஈரானின் அடிப்படைக் கொள்கைளுக்கு உட்பட்டே அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான ஈரானின் உரிமை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்க வைத்துக்கொள்வது போன்ற விஷயங்கள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் நோக்கில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதையும், ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டாலர் சொத்துகளை விடுவிப்பதையும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிப்பதையும் உள்ளடக்கியுள்ளது.

ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் விற்பனை மீதான தடைகளை நிறுத்திவைப்பது, ஏப்ரல் 13 முதல் அமலில் உள்ள ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முழுமையாக நீக்குவது, போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈரானுக்கு குறைந்தது 300 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவது ஆகியவற்றையும் இது உள்ளடக்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT