இப்ராஹிம் ஜோல்ஃபாகரி
தெஹ்ரான்: “நியாயமற்ற முறையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கும், இழப்புக்கும் அமெரிக்காவும் யூதர்களும் தக்க விலை கொடுப்பார்கள்” என்று ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஜோல்ஃபாகரி எச்சரித்தார்.
சனிக்கிழமையன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜோல்ஃபாகரி, “நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்கும் வீரர்களின் நடவடிக்கையின் பேரில், ஃபிருசாபாத் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய இடங்களில் இரண்டு எம்கியூ-9 ரக ட்ரோன்கள் மற்றும் தப்ரிஸ் வான்வெளியில் மற்றொரு விமானம் என மொத்தம் மூன்று விமானங்கள் 'செபா' (Sepah) படையின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதுவரை அழிக்கப்பட்ட பல்வேறு வகையான போர், உளவு மற்றும் ட்ரோன்கள் எண்ணிக்கை 112-ஐ எட்டியுள்ளது.
சர்வதேச குட்ஸ் தினப் பேரணியில் மக்களின் வியக்கத்தக்க பங்கேற்பைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்தின் துணிச்சலான வீரர்கள், செபா படையின் விமான மற்றும் கடற்படைப் பிரிவினர் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இணைந்து 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4'-இன் 45-வது அலை தாக்குதலை நடத்தினர்.
ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்ட யூதர்களின் வடக்குக் கட்டளை மையக் கட்டமைப்புகளையும், அமெரிக்கப் படைகளின் ராணுவ தளங்களையும் அழிப்பதே எங்களின் முதன்மையான உத்திசார் இலக்குகள் ஆகும். இப்பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, 'அல் தஃப்ரா' மற்றும் 'எர்பில்' ஆகிய தளங்கள் உட்பட அமெரிக்கப் படைகளின் மையங்கள் அடையாளம் காணப்பட்டுத் தாக்கப்பட்டன.
மேலும், “ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4 இன் 46-வது அலை தாக்குதலும்” மேற்கொள்ளப்பட்டது. இது அமெரிக்க மற்றும் யூத அரசின் தளபதிகள் மற்றும் படைகளை குறிவைத்து தாக்கியது. நியாயமற்ற முறையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான, இழப்பீட்டிற்கும் அமெரிக்காவும் யூதர்களும் தக்க விலை கொடுப்பார்கள்” என்றார்.