உலகம்

இஸ்ரேல் அரசின் புதிய கட்டுப்பாடுகளை ஏற்று பாக். உள்ளிட்ட 31 நாடுகளின் பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் தடை

செய்திப்பிரிவு

பாரிஸ்: ஃபிளை துபாய் சம்​பவத்​தையடுத்து இஸ்​ரேலுக்கு இயக்கப்​படும் விமானங்​களில் குறிப்​பிட்ட சில நாடு​களைச் சேர்ந்த பணி​யாளர்​கள் பணி​யாற்ற இஸ்ரேல் அரசு புதிய கட்டுப்பாடு​களை விதித்​துள்​ளது. மேலும், இந்த விதிமுறைகளுக்குத் தான் முழு​மை​யாகக் கட்​டுப்​படு​வதை ஏர் பிரான்ஸ் நிறு​வனமும் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து ஏர் பிரான்ஸ் வெளி​யிட்ட அறிக்​கை​யில், "மற்ற அனைத்து விமான நிறு​வனங்​களைப் போல​வே, ஏர் பிரான்ஸ் நிறுவன​மும் சேவை வழங்​கும் நாடு​களின் அதி​காரி​களால் விதிக்கப்​படும் நுழைவு விதி​களைத் தனது வாடிக்​கை​யாளர்​கள் மற்​றும் ஊழியர்​கள் இரு​வருக்​குமே பின்​பற்​று​வதற்​குக் கடமைப்பட்​டுள்​ளது.

அதன்​படி டெல் அவிவ் நகருக்கு இயக்​கப்​படும் விமானங்களுக்காக இஸ்​ரேல் அதி​காரி​களால் அமல்​படுத்தப்பட்டுள்ள புதிய விதி​முறை​கள் குறித்து சம்​பந்​தப்​பட்ட ஊழியர்​களுக்கு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது" என கூறப்​பட்​டுள்​ளது.

இஸ்​ரேலின் இந்த புதிய கொள்​கை​யி​னால் பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபி​யா, அல்​ஜீரி​யா, துனிசியா உள்​ளிட்ட முஸ்​லிம்​கள் பெரும்​பான்​மை​யாக வாழும் 31 நாடு​களின் குடி​யுரிமை பெற்ற விமானப் பணி​யாளர்​களுக்கு ஏர் பிரான்ஸ் தடை விதிக்​கும். இஸ்​ரேலின் ‘என்​12’ செய்​திச் சேனல் வெளி​யிட்​டுள்ள தகவலின்​படி, இஸ்​ரேல் போக்​கு​வரத்து மற்​றும் சாலைப் பாது​காப்பு அமைச்​சகம் கடந்த அக்​டோபர் 1 அன்று வெளி​நாட்டு விமான நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது.

அதன்​படி, இஸ்​ரேலிய வான்​வெளிக்​குள் நுழை​யும் விமானங்களின் பைலட் மற்​றும் கேபின் பணி​யாளர்​கள் இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்​லாத நாடு​களின் குடியுரிமையையோ அல்​லது இரட்​டைக் குடி​யுரிமை​யையோ பெற்​றிருக்​கக் கூடாது என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இஸ்​ரேலின் இந்த நடவடிக்கை தேசி​யத்​தின் அடிப்​படை​யில் பணியாளர்​களிடம் பாகு​பாடு காட்​டு​வ​தாக அமைவதோடு, பிரெஞ்சு தொழிலா​ளர் சட்​டத்​தின் கீழ் சட்​டப் போராட்டங்களுக்கும் வழி​வகுக்​கும் என்று சட்ட வல்​லுநர்​கள் எச்சரித்​துள்​ளனர்.

இஸ்​ரேலின் இந்த புதிய விதி​யால் இஸ்​ரேலுக்கு அல்​லது இஸ்​ரேலிய வான்​வெளி வழி​யாக விமானங்​களை இயக்​கும் பல சர்வதேச விமான நிறு​வனங்​கள் பாதிக்​கப்​படலாம் என்று கூறப்படு​கிறது.

கடந்த செப்​டம்​பர் 30 அன்​று, துபா​யில் இருந்து டெல் அவிவ் நகருக்​குச் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை ஓமன் நாட்​டைச் சேர்ந்த துணை பைலட் ஒரு​வர் கடத்​தி, இஸ்​ரேலின் பென் குரியன் விமான நிலை​யத்​தில் மோதச் செய்ய முயன்​ற​தாக ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் இஸ்​ரேல் அதிகாரிகள் தெரி​வித்​தனர். இந்​தச் சம்​பவத்​தின் எதிரொலியாகவே இஸ்​ரேல்​ இத்​தகைய தீவிரக்​ கட்​டுப்​பாட்​டை விதித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT