தெற்கு ஏமனில் அம்யான் மாகாணத்திலுள்ள ராணுவ தளத்தின் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "தெற்கு ஏமனில் முதியா மாவட்டத்திலுள்ள அம்யான் மாகாணத்தில் ராணுவ தளத்தின் வெளிப்புறத்தில் இன்று (திங்கட்கிழமை) குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வாகனத்தை ஓட்டிக் கொண்டு தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் குண்டை வெடிக்கச் செய்ததில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். 9 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்'' என்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஏமனில் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக ஏமனில் கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கப் படையினர் போரிட்டு வருகின்றன.
கடந்த 2015 முதக் அல் கொய்தாவை அழிக்கும் பொருட்டு ஏமனுக்கு சவுதி அரசும் படை உதவிகளை செய்து வருகிறது.
ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போருக்கு இதுவரை 8,600 பேர் பலியாகியுள்ளனர்.