காஸா மீதான தாக்குதலைக் கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்திய போதும் இஸ்ரேல் அதற்கு செவிசாய்க்கவில்லை. தனது தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளது. இத்தாக்குதல்களில் இதுவரை 720 பாலஸ்தீனர்கள், 34 இஸ்ரேலியர்கள் உயிரிழந் துள்ளனர்.
தென்கிழக்கு காஸா பகுதி யைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிவருகின்றனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் 475 வீடுகள் முற்றிலும் தகர்க்கப்பட்டன. 2,644 வீடுகள் பாதி சேதமடைந்தன.
46 பள்ளிக்கூடங்கள், 56 மசூதிகள், 7 மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.
விசாரணைக்கு உத்தரவு
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வாக்கெடுப்பு ஐ.நா.வில் நடந்தது, ஐ.நா வாக் கெடுப்பில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் வாக்களிக்கலாம். இதில், இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா உள்பட 29 நாடுகள் நாடுகள் பாலஸ்தீனத் துக்கு ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பில் பங் கேற்கவில்லை. இதில் இஸ்ரேலை சொல்லளவில் ஆதரிக்கும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அடங்கும். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மட்டும் வாக்களித்தது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக, இஸ்ரேல் போர்க்குற்றத்தில் ஈடு படுவதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தச் செய்யும் முயற்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் பாலஸ்தீன தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
கட்டப்பஞ்சாயத்து
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளதை இஸ்ரேல் எதிர்த்துள்ளது. இதனை கட்டப்பஞ்சாயத்து என இஸ்ரேல் வர்ணித்துள்ளது. மேலும், இம்முடிவு கேலிக்குரியது என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களை பல்வேறு விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ள நிலையில் ஐரோப்பா விமான நிறுவனங்களும் தடையை நீட்டித்துள்ளன.