உலகம்

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 28 பேர் பலி

செய்திப்பிரிவு

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, "சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள அமானாஸ் நகரில் ஜிகாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே இரவில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர்" என்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலை சிரியா அல்லது ரஷ்யா நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிகாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்துகிறோம் என்று சிரிய அரசும், ரஷ்யாவும் அவ்வப்போது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்க்கது.

          
SCROLL FOR NEXT