அக்‌ஷதா மூர்த்தி மற்றும் ரிஷி சுனக் 
உலகம்

ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு

செய்திப்பிரிவு

லண்டன்: இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று முன்தினம் 9.4% சரிந்தது. இது மூன்றாண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். இதனால், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தி கடந்த திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பைச் சந்தித்தார்.

அக்‌ஷதா மூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.94% பங்குகள் உள்ளன. நேற்று முன்தினம் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்த நிலையில் அக்‌ஷதா மூர்த்திக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அக்‌ஷதா வசமுள்ள பங்கு மதிப்பு ரூ.6,000 கோடியாக குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT