சான்பிரான்ஸிஸ்கோ: கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அங்கு பணியாற்றிய 50 சதவீதக்கு மேற்பட்டவர்களை நீக்கினார்.
இது தவிர, ட்விட்டரின் நீல நிறக் குருவி லோகோவுக்குப் பதிலாக, டாக்காயின் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் நாய் லோகோவை மாற்றினார். இது விமர்சிக்கப்பட்டதால் மீண்டும் நீல நிறக் குருவியை ட்விட்டர் லோகோவாக அவர் மாற்றினார்.
தற்போது அமெரிக்காவில் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ட்விட்டர் பெயர்ப் பலகையில் ‘டபிள்யூ’ எழுத்தை மறைத்துள்ளார். அதாவது Twitter என்றிருந்த பெயர்ப்பலகையில் w-வுக்கு வண்ணம் பூசியுள்ளார். இதனால், அது டிட்டர் (titter) என்று காட்சி அளிக்கிறது.