உலகம்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் இராக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

இராக்கிலும் சிரியாவிலும் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள அல்காய்தா ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இராக்கின் பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் தரக்கூடியது என எச்சரித்துள்ளது வெள்ளை மாளிகை.

எனவே இராக்கில் உள்ள தலைவர்கள் புதிய அரசு அமைக்க ஒன்றுபட வேண்டும் எனவும் அது யோசனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடகத்துறை செயலர் ஜோஷ் எர்னஸ்ட் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் சொல்வது போல் விரைவுபடுத் தாவிட்டால் இராக்கின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது நிச்சயம்.

அதனால்தான், இராக் அரசியல் தலைவர்கள் ஒன்றுபடுவதுடன் நிற்காமல் அரசியல் அமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ளபடி புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக் கைகளை முடுக்கி விட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா, மற்றும் இதர உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசு அமைந்தவுடன் நாட்டின் எதிர்கால நலனில் அனை வருக்கும் பங்கு இருக்கும் வகை யில் அனைத்து தரப்பினரையும் இடம்பெறச் செய்வது அவசியம்.

நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிப்பதாக பாதுகாப்புப் படைகள் இருக்கும் வகையில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து அதை வலுப்படுத்திட வேண்டும்.

புதிய அரசு அமைந்தால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ள முடியும். இராக் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒபாமா முடிவு எடுத்தால் அது தமது நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டே இருக்கும். இராக் எதிர்கொண்டுள்ள சவால் களை சமாளிக்க அரசியல் தீர்வு உதவிடும். என எர்னஸ்ட் தெரிவித்தார்.

இதனிடையே, சுதந்திர நாடாக குர்திஸ்தானை அறிவிக்கலாமா என்பது பற்றி பொது மக்களின் கருத் தறிய வாக்கெடுப்பு நடத்துவதற் கான ஏற்பாடுகளை குர்திஸ்தான் தன்னாட்சி பிராந்தியம் தொடங் கியது.

தன்னாட்சி பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் மசூது பர்சானி, சுய நிர்ணய உரிமை பற்றி கருத்து கணிப்பு நடத்துவதற் கான ஏற்பாடுகளை மேற்கொள் ளும்படி நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார். சுதந்திரம் கிடைத்தால் அது நமது நிலையை வலுப்படுத்தும்; அது நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்றார் அவர். இந்த கோரிக்கையை இராக் பிரதமர் மாலிகி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் குர்திஸ்தானின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இராக் ஒற்று மையாக இருந்தால்தான் தீவிரவாதி களை ஒடுக்கமுடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஒரு வார கால மாக கடுமையாக போரிட்டாலும், தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள திக்ரித் நகரை கைப்பற்ற அரசுப் படைகளால் முடியவில்லை. சாலை களில் கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுள்ளதால் அரசுப் படைகள் முன்னேறிச் செல்வதில் வேகம் காண முடியவில்லை.

SCROLL FOR NEXT