உலகம்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம்

ஏபி

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் உள்ள மியான்மர் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கூடி மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை எதிர்த்து  போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்திக் கொண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களை காப்பாற்றுங்கள் என்று அவர்கள் குரல் எழுப்பினர். பெண்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பலர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில்தான் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் வன்முறை காரணமாக  110 பேர் கொல்லப்பட்டனர். 18 அயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT