உலகம்

குல்பூஷண் ஜாதவ்வை ஒப்படைக்க இந்தியா அளித்த யோசனை: பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

உளவு பார்த்த குற்றத்துக்காக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இந்தியா கடற்படை அதிகாரி குல்பூஷண் யாதவ்வை ஒப்படைக்க இந்திய புதிய பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆசியா குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் ஆசிஃப் பேசும்போது இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, " குல்பூஷண் ஜாதவ்வை இந்தியாவிடம் ஒப்படைந்தால் அவருக்கு பதிலாக கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் குண்டு வெடிப்பு நடத்திய ஆப்கன் சிறையில் இருக்கும் தீவிரவாதியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் யோசனை இருப்பதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தரப்பிலிருந்து யோசனை வந்துள்ளது" என்றார்.

எனினும் அந்த தீவிரவாதியின் பெயரையும், இந்திய தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

மேலும் இந்த கலந்துரையாடலில் பாகிஸ்தான் அதன் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும்

தீவிரவாத தாக்குதல் காரணமாக ஆப்காணிஸ்தானில் நிலைமை மோசமாகியுள்ளது. தனது மண்ணை பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தாது  என்றும் ஆசிஃப் பேசினார்.

பாகிஸ்தானில் பெஷாவரிலுள்ள ராணுவ பள்ளியில் கடந்த 2014 நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 150 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT