உலகம்

8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து சொந்த கின்னஸ் சாதனையை மீண்டும் முறியடித்தார் கனடா சீக்கியர்

செய்திப்பிரிவு

ஒட்டவா: ஸ்வீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்ததுதான் கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்தார். அப்போது அவரது தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன்பின் கடந்த 2010-ம் ஆண்டில் இவரது தாடியை இத்தாலியில் நடந்த நிகழ்ச்சியில் அளந்தபோது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்திருந்தது. கடந்தாண்டு அக்டோபர் 15-ம் தேதி சர்வன் சிங் தாடியை அளந்தபோது அது 8 அடி 3 அங்குலமாக இருந்தது. ஆனால் முன்பு இருந்ததைவிட, தாடி தற்போது நரைத்த நிலையில் உள்ளது.

இது குறித்து சர்வன் சிங் கூறுகையில், ‘‘நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். ஒருபோதும் வெட்டியதில்லை. சீக்கியராக இருப்பதில் தாடி முக்கியமான அம்சங்களில் ஒன்று. இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT