உலகம்

நைஜிரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி

ஏஎஃப்பி

நைஜிரியாவில் வணிகர்கள் படகு கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர்.

இதுகுறித்து நைஜிரிய தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், "நைஜிரியாவின் கெப்பி மாகாணத்தில் நைஜிரியாவின் வடக்கு பகுதியை சேர்ந்த வணிகர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 33 பேர் பலியாகினர்.  அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் படகில் பயணித்த 23 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நீண்ட நேரமாக நடந்து கொண்டிருப்பதால் அவர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT