உலகம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: ஃபுக்குஷிமா அணு உலை அருகே பாதிப்பு

செய்திப்பிரிவு

ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள ஹோன்ஷூ தீவு அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரிகடர் அளவில் 6.8 என்பதாக பதிவான இந்த நிலநடுக்கம், இவாக்கி என்ற பகுதியில் பூமிக்கு அடியில் 10 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தினால் ஃபுக்குஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஃபுகுஷிமா அணு உலைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியானத் தகவல் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஃபுக்குஷிமா அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என டோக்கியோ மின் உற்பத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் சுற்றுவட்டாரத்தில் சேதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஃபுக்குஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோரப் பகுதியில் உள்ள இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பேரிடர் மேலாண்மை குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT