ஆப்கனில் தாலிபன்களால் கடத்தப்பட்ட அரசு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு கூறியுள்ளது.
இதுகுறித்து ஹெராத் நகர ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஆப்கானில் 20 நாட்களுக்கு முன்னர் சுங்கத் துறையை சேர்ந்த இரண்டு அரசு ஊழியர்களும். கார் ஓட்டுநர் ஒருவரும் தாலிபன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்ட மூவரும் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
சமீப காலமாக எந்தவித கோரிக்கையும் வைக்காமல் தாலிபன்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.