உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் மோடி

பிடிஐ

பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக சீனா புறப்பட்டுச் சென்றார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினராக உள்ளன. அந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாவட்டம் ஜியாமென் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நிகழும் டோக்லாம்  உட்பட பல்வேறு பிரச்சினைகளை சீன பிரதமர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மோடியின் இந்தப் பயணம் சீனா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடான  உறவை மேலும் வலுவடைய செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு பிறகு பிரதமர் மோடி ஆக்ஸ்ட் 5-ம் தேதி மோடி மியான்மர் செல்ல இருக்கிறார்.

கடந்த வருடம் கோவாவில் இந்தியா சார்பில் பிரிக்ஸ் மாநாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT