வாஷிங்டன்: உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதை 30% வேகப்படுத்த உதவும் இ-பேண்டேஜ் என்றமின்னணு கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இதன்படி, 2 எலிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி அவற்றில் ஒன்றுக்கு புதிய இ-பேண்டேஜை பொருத்தி உள்ளனர். மற்றொரு எலியை அப்படியே விட்டுள்ளனர். இதில், குறிப்பிட்ட நாளில் இ-பேண்டேஜ் பொருத்தப்பட்ட எலி வேகமாக குணமடைந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்தவர்களில் ஒருவரும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான ஏ.அமீர் கூறும்போது, “நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் விரைவில் ஆறுவதில்லை. பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறது. காயங்களை குணப்படுத்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இந்த புதிய கருவி நீரிழிவு நோயாளிகளின் காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதற்கான செலவும் குறைவாகவே இருக்கும். பயன்படுத்துவதற்கும் எளிதானது. இந்தக் கருவி காயங்களை மூடிவிடும் என்பதால் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.