உலகம்

இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 200-ஆக உயர்வு

பிடிஐ

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை கூறும்போது, "இலங்கையில் கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழைக்கு 202 பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் காணவில்லை. 1,500க்கு அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 77, 432 பேர் அவர்களது சொந்தப் பகுதிகளிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இலங்கையில் மோசமான வானிலை நிலவுவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழையின் அளவு கடந்த 24 மணி நேரத்தில் வெகுவாக குறைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஐஎன்எஸ் கிர்ச் போர்க் கப்பலை உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் கொழும்புவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT