இராக்கின் கராடா பகுதியில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடை முன்பு நேற்று முன்தினம் இரவு மக்கள் நெரிசல் அதிகளவில் இருந்தது. ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு முஸ்லிம்கள் தங்களது கடமையை ஆற்றிக் கொண்டிருந்த போது, திடீரென கார் வெடிகுண்டு வெடித்தது.
இந்த வெடிகுண்டுத் தாக்குத லில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 32 பேர் படுகாய மடைந்தனர். கார் வெடிகுண்டு வெடிப்பது அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பாலம் அருகே மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 இடங்களிலும் தீவிரவாதச் செயல்களை நிகழ்த்தியது ஐ.எஸ் தீவிரவாதிகள் என்பது தெரியவந்தது.