உலகம்

அதிக கொலைகள் நடக்கும் நாடுகளில் சிரியாவுக்கு அடுத்து மெக்சிகோ: ஆய்வில் தகவல்

ஏஎஃப்பி

அதிக கொலைகள் ஏற்படும் நாடுகள் குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு ஐஐஎஸ்எஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சிரியா முதலிடத்தில் உள்ளது.

ஐஐஎஸ்எஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் சிரியா முதலாவதாகவும், மெக்சிகோ இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஆச்சரியம் என்வென்றால் 2011 முதல் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் இறப்பது தொடர் கதையாக உள்ளது. ஆனால் மெக்சிகோவை பொறுத்தவரை இது சற்று தலைகீழாக உள்ளது மெக்சிகோவில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐஎஸ்எஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலில், "மெக்சிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 16,000 மரணங்கள் குற்றச் செயல்கள் மூலம் நடந்துள்ளன. இது மிகவும் அரிதான ஒன்றாகும். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோவின் நடவடிக்கையால் அங்கு கொலைச் சம்பவம் அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT