உலகம்

அமெரிக்காவில் நடந்த அறிவியல் போட்டி: இந்திய மாணவருக்கு முதல் பரிசு

பிடிஐ

அமெரிக்காவில் நடந்த பள்ளிகளுக்கான உலகின் மிகப் பெரிய அறிவியல் போட்டியில் இந்திய சிறுவன் சிறப்பான படைப்பை சமர்ப்பித்து முதல் பரிசைத் தட்டிச் சென்றான். சென்னை பள்ளியைச் சேர்ந்த சகோதர, சகோதரியும் மீனவர்களுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து அசத்தினர்.

அமெரிக்காவின் வாஷிங் டனில் பள்ளிகளுக்கான உலகின் மிகப் பெரிய அறிவியல் போட்டி கடந்த ஒருவாரமாக நடந்து வந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,700 மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் பிரசாந்த் ரங்கநாதன் என்ற மாணவரும் கலந்து கொண்டார். இவர் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் நடந்த போட்டியில் தனது படைப்பை சமர்ப்பித்தார். விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் மண் சார்ந்த நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது குறித்த படைப் புக்கு முதல் பரிசு கிடைத்தது. இவரது படைப்பு பூச்சிக் கொல்லி களால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக களையக் கூடியது. இதன் காரணமாகவே இவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

சென்னை பள்ளியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளான சாய்ராந்தி சத்யநாராயணன் மற்றும் சச்சேத் சத்யநாராயணன் இருவரும் இரவில் மீன்பிடி படகில் செல்லும் மீனவர்கள் கீயர்பாக்ஸ் மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்வதற்கான புதிய கண்டு பிடிப்பை சமர்ப்பித்தனர். இவர் களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. இதேபோல் கொல்கத்தா, பெங்களூரு, மும்பை பள்ளிகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.

SCROLL FOR NEXT