உலகம்

இந்திய வம்சாவளி மாணவர் அமெரிக்காவில் மர்ம மரணம்

பிடிஐ

நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 20 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த வாரம் புதன்கிழமை அவர் காணாமல் போன நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மின்னணுவியல் பிரிவு பொறியியல் மாணவரான ஆலாப் நரசிப்புரா, கார்னல் பொறியியல் கல்லூரியில் இருந்து கடந்த புதன்கிழமை அன்று காணாமல் போனார்.

கார்னெல் பல்கலைக்கழக காவல்துறையினர், நியூயார்க் மாகாண போலீஸாரோடு இணைந்து நரசிப்புராவின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். அவரின் உடல் இதாகா அருவிக்கு அருகே உள்ள ஃபால் க்ரீக் என்னும் இடத்தில் கிடந்துள்ளது. இதாகா தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையின் உதவியோடு அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கார்னெல் பல்கலைக்கழக போலீஸார் நரசிப்புராவின் மரணம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

நரசிப்புரா இந்த டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக பட்டம் பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT