இராக் தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 35 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் அதிகாரிகள் தரப்பில், "பாக்தாத்தில் சோதனைச் சாவடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 35 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த வாரத்தில் மட்டும் இதே போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியதால் இந்த தாக்குதலையும் ஐஎஸ் தீவிரவாதிகளே நடத்தியிருக்கலாம் என்று இராக் அரசு தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.