உலகம்

முழி பிதுங்கும் மெக்ஸிகோ

ஜி.எஸ்.எஸ்

யு.எஸ். மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இரண்டுக்கும் இடையே அமைந்துள்ள நாடான மெக்ஸிகோ இன்று ஒரு புதுவிதமான திருட்டு காரணமாக நிலைகுலைந்திருக்கிறது.

மெக்ஸிகோவிலுள்ள முக்கியப் பகுதிகளில் ஒன்று பூப்லா. இந்தப் பகுதியில் நிலத்துக்கு அடியில் செல்லும் பெட்ரோல் பைப் களை (அங்கெல்லாம் அப்படித் தான்) உடைத்து பெட்ரோலைத் திருடுகின்றன சில கும்பல்கள். இப்படித் திருடப்படும் பெட்ரோலை குறைந்த விலையில் (பெட்ரோல் பங்க்கில் விற்கப்படும் விலையில் பாதிதான்) வாங்கு வதற்கு வரிசையாக காத்திருக் கின்றன லாரிகள். பூப்லாவில் மட்டுமே இப்படி 1500 ‘திருட்டுக் குழாய்கள்’ பொருத்தப்பட்டிருக் கின்றன.

திருட்டு கும்பல் வருகிறது அதிக சக்தி வாய்ந்த டிரில்லிங் கருவிகளைக் கொண்டு பெட்ரோல் குழாய்களை துளையிடுகிறது. அங்கு மெல்லிய குழாய்களைப் பொருத்தி பெட்ரோலை வெளியேற்றுகிறது. நேரடியாக லாரிகளுக்கே இந்தப் பெட்ரோலை நிரப்புவதற்காக நீளமான ரப்பர் பைப்களையும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

சட்டம் என்ன செய்கிறது? அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? நியாயமான கேள்விகள்தான். ஆனால் போதை மருந்துக் கடத்தல் மாஃபியாவுக்குப் பிறகு அதிக சக்தி படைத்தவையாக உருவாகி வருகின்றன இந்த பெட்ரோல் திருட்டு மாஃபியாக்கள். அரசால் ஒன்றும் செய்ய முடியாததற்கு முக்கிய காரணம் உள்ளூர் மக்களே இந்தத் திருட்டுக் கும்பலுக்கு ஆதரவாக இருப்பதுதான்.

உள்ளூர்வாசிகளுக்கு இவர்கள் வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள்! தவிர பொதுமக்களுக்குக் குறை வான விலையில் பெட்ரோல் கிடைக்கிறது. போதாக்குறைக்கு அன்னையர் தினம் போன்ற நாட்களில் அந்தப் பகுதி மக்களுக்கு பரிசுகளை வேறு வழங்குகின்றன இந்த மாஃபியாக் கள். பரிசு என்றால் ஏதோ பேனா, பென்சில் அல்ல. தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற பெரிய தூண்டில்களை வீசி மக்களைக் கவர்கின்றன மாஃபியா கும்பல்கள். (அங்கும்!).

மெக்ஸிகோவின் முக்கிய நிதி ஆதாரங்களில் ஒன்று பெட்ரோலியக் கிணறுகள். இதில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள், இப்போது பின்வாங்கத் தொடங்கி யுள்ளன. தவிர மெக்ஸிகோவின் பல பகுதிகளில் ராணுவத்துக்கும் திருட்டு பெட்ரோல் மாஃபியாவுக்கு ஏற்படும் மோதல்களால் கலவரங் கள் உண்டாகின்றன. கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேறொரு அபாயகரமான விளைவும் உண்டாகிறது. சட்ட மீறலாக பொருத்தப்படும் குழாய் கள் அவ்வப்போது வெடிக்கின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதியி லுள்ள பல வீடுகள் நாசமடை கின்றன. உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் நிலத்தடியில் செல்லும் பெட்ரோல் குழாய் களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? அதுவும் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்பு இல்லாமல்! மெக்ஸிகோ அரசு திணறிக் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT