சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
ராணுவ பலம் இல்லாத திபெத், ஜின்ஜியாங் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து தனது கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பது உலகறிந்த உண்மை. திபெத்தியர் களின் போராட்டங்களை அடக்க அங்கு பெருமளவில் சீனர்களை குடியமர்த்தி உள்ளது. இதேபோல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் சீன குடியிருப்புகளை அதிகப் படுத்தி வருகிறது.
தற்போது ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற திட்டத்தின் கீழ் ஜின்ஜியாங்கில் இருந்து பாகிஸ்தானின் குவாதர் துறை முகத்துக்கு வர்த்தக பாதை அமைக்கப்பட்டுள்ளது. சீனா- பாகிஸ்தான் வர்த்தக பாதை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாலை ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித், பலுசிஸ்தான் மாகாணங்கள் வழியாகச் செல்கின்றன.
பலுசிஸ்தான், கில்ஜித் காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதற்கு எதிராக பலூச் உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப் போராட்டங்களை நடத்தி வரு கின்றன. தற்போது சீனாவுக்கு எதிராகவும் பலுசிஸ்தான், கில்ஜித் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித் துள்ளனர். வர்த்தக பாதைக்கு அருகில் உள்ள நிலங்களைச் சீனாவுக்கு குத்தகைக்கு விட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கராகோரம் மாணவர் கூட்ட மைப்பு, பலவரிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பு, கில்ஜித் பல்திஸ்தான் ஐக்கிய கூட்டமைப்பு, பலவரிஸ்தான் தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கில்ஜித், ஹுன்சா, ஸ்கார்டு, கெய்சர் ஆகிய பகுதிகளில் நேற்று சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
‘சீனா-பாகிஸ்தான் வர்த்தக பாதை திட்டம் எங்களுக்கு தேவை யில்லை. எங்கள் பகுதி இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று போராட்டக் குழுவினர் எச்சரித் துள்ளனர்.
வர்த்தக பாதை திட்டத்துக்காக சீனாவைச் சேர்ந்த 9 ஆயிரம் பொறியாளர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக சீன பொறியாளர்களின் பாதுகாப் புக்காக ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘சீனா-பாகிஸ்தான் வர்த்தக பாதை திட்டம் தேவையில்லை. எங்கள் பகுதி இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம்’.