சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடம் முடிக்கும் பணி தாமதமாகியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
உலகிலேயே உயரமான கட்டிமான ஜெட்டா டவர் சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணி பொருளாதார நெருக்கடி காரணமாக 2019-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது சவுதி இளவரசர் அல்வாலீத் பின் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம், "கட்டிடத்தை முடிக்கும் பணி பொருளாதார நெருக்கடி காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணி 2018-ம் ஆண்டு முடிவடையும் என்று சவுதி சார்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.