உலகம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் செய்ய தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு

செய்திப்பிரிவு

இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர் பாளர் பர்ஹான் ஹக், நியூயார்க்கில் நேற்று முன்தினம் கூறியதாவது:

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. தற்போதைய பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கு இடையேயும் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சபை தயாராக உள்ளது. ஆனால் அதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த் தையை தொடங்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீர், எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் மூன்றாம் தரப்பு தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ளது.

அதேநேரம் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. அதற்காக காஷ்மீரில் தீவிரவாதம், பிரிவினைவாதத்தை தூண்டிவிட கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைக்கிறது, ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.

SCROLL FOR NEXT