உலகம்

அமெரிக்காவில் கரையை கடந்தது ‘ஆர்தர் புயல்- கனமழை பெய்யும் என எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் வடக்கு கரோலினா வில் ஆர்தர் புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கேப் லுக்அவுட் மற்றும் பியூபோர்ட் இடையே உள்ள ஷாக்கில்போர்டு கரை பகுதியில் வெள்ளிக்கிழமை 8.45 மணிக்கு ஆர்தர் புயல் கரையைக் கடந்ததாக அந்நாட்டு தேசிய புயல் மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு கரோலினா மாநில ஆளுநர் பாட் மெக்ரோரி கூறியதாவது:

சுதந்திர தின விடுமுறை என்ப தால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை கடற்கரைப் பகுதியில் குழுமினர். இந்நிலையில் புயல் கரையைக் கடந்திருப்பதால் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடல் அலைகள் வழக்கத் துக்கு மாறாக சீற்றத்துடன் காணப் படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு பகுதி களில் அவசரநிலை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது மேலும் பல பகுதிகளுக்கு நீட்டிக்கப் படலாம்.

தாழ்வான பகுதிகளில் வசிப் பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந் தால் அதை எதிர்கொள்வதற்கு மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT