உலகம்

வெளிநாடுகளில் குடியேறுவதில் இந்தியர்கள் முதலிடம்: 1.56 கோடி பேர் இடம்பெயர்வு

செய்திப்பிரிவு

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுமார் 1.56 கோடி பேர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந் துள்ளனர். அந்த வரிசையில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச அகதிகள் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி நிறுவனம் அகதிகள் தொடர்பாக ஓர் ஆய்வறிக்கையை வெளி யிட்டுள்ளது. அதில் கூறியிருப்ப தாவது:

உலகம் முழுவதும் சுமார் 24.4 கோடி மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் இது 3.3 சதவீதம் ஆகும். உலகம் முழுவதும் வாழும் அகதிகளைக் கொண்டு ஓர் நாட்டை உருவாக்கினால் சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 5-வது நாடாக அந்த நாடு இருக்கும்.

வெளிநாடுகளுக்கு அகதி களாக குடிபெயரும் நாட்டினர் வரிசையில் இந்தியர்கள் முதலிடத் தில் உள்ளனர். சுமார் 1.56 கோடி இந்தியர்கள் அகதிகளாக பல் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந் துள்ளனர். மிக அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்து மெக்ஸிகோ 1.23 கோடி பேர், ரஷ்யா 1.06 கோடி பேர், சீனா 95 லட்சம் பேர், வங்கதேசம் 72 லட்சம் பேர் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அகதிகள் அதிகம் குடியேறும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 4.66 கோடி பேர் அகதிகளாக குடியேறியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

SCROLL FOR NEXT